பக்கம்:அந்தித் தாமரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


நேரமாயிடுச்சு; மறக் துடாம ஒரே ஒரு ரோஜப் பூவைச் சடையிலே செருகிப் பிடு, அம்மா."

"உம்..."

பிறை நெற்றியைத் தழுவ ஒடி வந்த சுருள் கேசத்தை சூடாமணி நுனிவிரலால் கோதிக் கொண்டிருந்தாள். ருக்மிணி குழற்கற்றையை இணை சேர்த்துக் கொண்டிருந்தாள். தந்தச் சீப்பு இடையில் தூது.

"அம்மா!”

“இதோ ஆயிடுச்சு, கண்ணே!"

"ஐயையோ, பத்தடிக்கப் போகுதே.”

"அவ்வளவுதான்.”

"ரோஜாப்பூ?”

"ஒ, வச்சிட்டேனே!"

"பொட்டு?"

“வச்சிட்டேன், சூடாமணி.”

எதிரிலிருந்த பெல்ஜியம் கண்ணாடிக்கு எவ்வளவு குறும்பு! தாயும் மகளும் சிரிப்பதை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறதே!

"மேக்கப் எப்படி, மணி?”

"பஹூத் அச்சா!"

"ஊஹூம், பஹூத் அச்சா ஹை!”

"சரி, சீக்கிரம் புடவை மாற்றி கொண்டு புறப்படு, அம்மா.”

“நான் எதற்கு, கண்ணே? நீ போய்ப் பரிசுகளை வாங்கிக் கொண்டுவா. அவற்றைப் பார்த்து நான் ஆனந்தப் படுகிறேன்."

“இன்னிக்கு என் டான்ஸ் வேறே இருக்குதே...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/8&oldid=1332213" இலிருந்து மீள்விக்கப்பட்டது