பக்கம்:அந்தித் தாமரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


‘உன் டான்ஸைத்தான் நான் ஒவ்வொரு நிமிஷமும் பார்த்து ஆனந்தப் படுறேனேம்மா!"

“போ, அம்மா ஒரு ஜில்லா கலெக்டர் உன் மகளுக்குப் பரிசு வழங்கப் போறர். அந்தக் காட்சியைக் கண் குளிரப் பார்க்க உனக்கு ஆசை வரல்லியா? நீ வந்தால் தான் நான் இப்போ ஸ்கூலுக்குப் போவேனுக்கும்.’’

"கோவிச்சுக்காதே, சூடா. நானும் இதோ உன் கூட வக்திடுறேன்.”

பெதும்பை மனம் சிரித்தது.

"பேஷ், அம்மான்ன அம்மாதான்! அம்மா, இன்றைக்காகிலும் சிரிக்க மாட்டாயா?”

புயல் மத்தியில் பூந்தென்றல் பிறந்தது.


பாவை விளக்கில் ஒளிச் சுடர் ஏற்றம் புரிந்தது.

ஊர் பையப் பைய அடங்கிக் கொண்டிருந்தது.

ருக்மிணி சுரதிருந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்; பிறகு அவள் திருஷ்டி மகள் மீது சென் றது. சூடாமணி அமைதியை அணைத்துக் கொண்டு உறக்கம் கொண்டிருந்தாள். தாயின் மனத்தில் அடித்த புயலை மகள் எப்படி அறிவாள்?

புகைப்படம் பிடித்தாற் போல இன்னும் அந்தக் காட்சி அவள் கெஞ்சில் தடம் பதிந்திருந்தது. குழந் தைக்குக் கலெக்டர் பரிசுகளை வழங்கினர். அத்துடன் தன் அன்புப் பரிசிலாகத் தங்கப் பாவைவிளக்கையும் அளித்தார். கடைசியில், "சூடாமணியைக் குழந்தை யாகப் பெறப் பாக்கியம் செய்த தாய் தந்தையருக்கு என் பாராட்டுதல்கள்...!" என்ற அவருடைய புகழுரை அவளுள் இன்னமும் எதிரொலிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/9&oldid=1350809" இலிருந்து மீள்விக்கப்பட்டது