பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோமையா மூப்புத் தெரியாத விதத்தில் ஒடி ஆடிப் பணி செய்து கொண்டிருந்தார். நந்தினி விலாசத்தில் அவருடைய அந்தரங்கபூவமான பணியும் பாசமும் கிட்டத்தட்ட பத்தொன்பது ஆண்டுகளின சரித்திரத்தைக் கொண்டது அல்லவா? அறந்தாங்கிச் சீமையிலிருந்து இங்கே சென்னைப் பட்டணத்திற்கு ஆசைக்கு ஒரு பெண்ணாக தந்தினி பிறந்த தருணத்தில் வந்தவர் அவர் ; ஆஸ்திககு ஒர் ஆனாகப் பாபு அவதரித்த நேரத்தில் அவர் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை!

“அ...த்...தான்!"

கைப்பிடி நாயகனைக் காதலாகிக் கசிந்து உருகி விளித்தாள் ரஞ்சனி.

“என்ன, ரஞ்சனி?"

"........."

"சொல், ரஞ், சொல்!"

"நம்ப பாபு.’’

"பாபு...?’’

"நம்ம பாபுவை நாம நம்ம வீட்டிலேயே எப்பவுமே வச்சிக்கிட்டால்தான், எம் மனசு என்னமோ சமாதானமும் அமைதியும் அடையும்னு தோணுதுங்க, அத்தான். உங்க ஞக்கு நான் இப்பிடிச் சொல்றது ஆச்சரியமாயிருக்கும்: ஏன், திகைப்பாகவும் இருக்கலாமுங்க! -நான் பயப்பட்டபயப்பட்டுக்கிட்டே இருக்கிற நெருப்பு, என்னேட பக்கத்திலேயே இருக்கவேணும்னு நான் ஆசைப்படுறேனுங்க: அது மட்டுமில்லே; அந்த நெருப்பைச் சதாசர்வகாலமும் தொட்டுத் தொடடு ஆனந்தப்படவேணும் என்கிற ஒரு விசித்திரமான ஆசைக்கும்கூட நான் இப்ப ஆளாகிட்டேன்:

112