பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரித்தெடுத்துக் கொண்டேயிருந்த பயங்கரமானதோர் அவலத்தை அறிவு பூர்வமாகவும் அவரால் உணர முடிந்தது!-விதியின் வினையும், வினைபின் விதியும் வேடிக்கை மனிதர்களைப்போல் சித்திர விசித்திரமாக ஒன்று சேர்ந்து விளையாடிய, அல்லது, விளையாட்டுக் காட்டிய அந்த அந்தி நேரத்துத் துயரக் கூத்து, உச்சகட்டத்திலே, மனிதத் தன்மையின் மிகமிக மசத்தானதான திரும்பு முனையாக அமைய நேர்ந்த நேரத்திலே, மங்கலான ஒளியும் அன்பு மயமான சோகமும் காட்டி அந்த அந்தி நிலா உதயமான ஆச்சரியத்தையும் அற்புதத்தையும்கூட அவரால் மனப் பூர்வமாகவும் உணர முடிந்தது!...

அப்பாவுக்குத் தன் நினைவை ஊட்ட மகனால்தான் முடியும்; முடியவும் முடிந்தது.

அம்மாவுக்குச் சிரிப்பை ஊட்டவும் அந்த மகனாலே தான், இந்த மகனாலேதான் முடியும்; முடியவும் முடிந்தது.

ரஞ்சித் விழித்தார்: பாபு பிரச்சனையை வெற்றியோடு முடித்தால்தான், என் ரஞ்சனி உயிர்தறிப்பாள்: அந்தத் துப்பு தெளிவாகவே புரிகிறது!

ரஞ்சனியும் சேர்ந்து விழித்தாள். பாபுவை இனி இங்கேயே, எங்களுடனேயே எப்போதும் தங்கச் செய்து விட்டால்தான். நான் உயிர் பிழைப்பேன்; மீண்டும் ஒரு பிறவி எடுத்து, அதாவது, மூன்றாவது பிறவி எடுத்து, நான் பிழைக்கவும், உயிர் பிழைக்கவும் முடியும்: 'ஆமா, இது சத்தியம்!' ...

தாயையும் தந்தையையும் பார்க்கப் பார்க்கப் பாபுப் பையனுக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. மாளாத சிந்தனையிலே மீளமாட்டாமல், மாய்த்து போய்விட்டார்களே இவர்கள்?-இவர்களுக்கு அப்படி என்ன தீராத பிரச்னை ஏற்பட்டுவிட்டதாம்?-"ஒண்ணுமே விளங்கக் காணோமே?-பகவானே!”

அ-8

117