பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறவிக்கு ஒரு அர்த்தம் இருக்க வேணாமா? அதனாலேதான், ஆண்டவன் அன்பு என்கிற அற்புதமான தத்துவத்தையே உண்டாக்கிக் கொடுத்திருக்கான்; அந்த அன்பின் சக்திக்கு அழகான சாட்சியைச் சொல்லத்தான் அதோ, ஊதுவத்தி தன்னை அழிச்சுக்கிட்டு, ஆனந்தமான வாசனையைத் தெய்வத்துக்கு ‘நைவேத்தியம்’பண்ணிக்கிட்டிருக்குதாக்கும்: அன்பின் காலடியிலே சரணாகதி அடைகிற மன்னிக்கக் கூடாத, மன்னிக்க முடியாத எந்தப் பாவமும் கூட விடி மோட்சம் பெறாமல் தப்பவே முடியாது! இதுவேதான் அன்போட சக்தியுமாகும்! தன்னையே அழிச்சுக்கக்கூடிய ஒரு இக்கட்டான நெருக்கடி நிலைமை ஏற்பட்டாலும் சரி. மனிதர்கள் மனிதாபிமானத்தோடே அன்பை வாழ்த்தவும் வணங்கவும் தவறக்கூடாது! இன்னொரு நடப்பையும் முத்தி ஒரு வாட்டி அம்மாகிட்டே நான் சொன்னப்ப, நீயும் இருந்தாய்: திருப்பியும் சொல்றேன்: நான் மற்றவங்க கிட்டே அன்பைக் காட்டினேன்; தெய்வம் என் பேரிலே அன்பைக் காட்டிச்சு! அதனாலேதான் அன்றைக்கு ஆண்டியாக இருந்த உன் அப்பன் இன்றைக்கு பணம் காசோடவும் சீரும் செல்வாக்கோடவும் இந்தச் தமிழ்ச் சமூகத்திலே நல்ல பேரோடு தலைநிமிர்ந்து நடக்கவும் முடியுது! அங்கே பார், பாபு!-அந்த ஊதுவத்தி தன்னையே முழுமையாக எரிச்சுக்கிட்டுது; ஆனாலும், ஊதுவத்தியோட அந்தத் தெய்வ மணம் இன்னமுங் கூட நாலா பக்கத்திலேயும் எத்தனை அற்புதமாய்க் கமழ்ந்துக்கிட்டு இருக்குது, கண்டியா, பாபு?-இது மாதிரி, நாம மற்றவங்ககிட்டே காட்டுற அன்பு நாளும் பொழுதும் உயிர் வாழக்கூடிய அன்பாகவும் இருக்க வேணும்; உண்மையான அன்புக்கு லாப நஷ்டக் கணக்கைப் பார்க்கிறத்துக்கு நேரம் இருக்காது!- ஆமா, அன்பு உடையவங்க எல்லாம் உடையவங்கதான்!- மறந்திடாதே; அதாவது, மற்றவங்ககிட்டே அன்பைக் காட்டுறதுக்கு நீ மறந்திடாதே! நீ நன்றிக்கடன் பட்டவன்: அதனாலே, நீ

173