பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

*அங்கேயே விட்டுட்டு வந்திட்டிங்க போலிருக்கு”

“ஆமா; ஆமா; நினைப்பு வந்தாச்சு; அங்கே மேஜை மேலேதான் போட்டுட்டு வந்தேன்!”

"நம்ப ஸி, ஐ. டி. பாபு அங்கே போகையிலே, மேஜையைத் திறந்து உங்க பெர்ஸனல் டயரியைப் படிச்சிட்டான்ன, என்ன ஆகிறதாம்?”

"நம்ம பாபு அந்தரங்கமான அந்த டைரியைப் படிக்க வேணும்னுதான், அப்படி மேஜைமேலே சாவியைப் போட்டுப்பிட்டு வந்திருக்கேளுக்கும்!”

"அத்தான்..." என்று பதறிவிட்டாள் ரஞ்சனி.

"எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு அவதிப் பட்டது போதாதா?-பத்து வருஷமாகத் தெரிஞ்சுக்காமல் இருந்த தன் கதையை இனியாகிலும் நம்ப பாபு தெரிஞ்சுக்கிட வேணுமா, என்ன? குரலைத் தாழ்த்தியும், அன்பை உயர்த்தியும், நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லாமல், சூழ்நிலையை எடுத்துக்காட்டிஞர் பாங்கர்.

அவள் 'ஜடம்' ஆனாள். இருதயத்தின் இடப்பக்கநோவு அதிகரித்தது: வழக்கத்தைவிடவும் அதிகப்படின அழுத்தத்தோடு நெஞ்சிற்குத் தடவிக் கொடுத்தான்; வளையல்கள் முகப்பு ஒளியில் வைரம் கக்கின; ஜாதி ரோஜாப்பூவின் இதழ் ஒன்று இடதுபுறக் காலடியில் தஞ்சம் அடைந்தது. பாபு தன்னோட பயங்கரக்கதை காரணத்தை அறிய நேர்ந்தால், என்னோட கதி என்ன ஆகுமோ? பாபு, என் தெய்வமே!-பரசுராமரி அவதாரம் எடுத்துவிடுவானே பாபு? அயர்வோடும் களைப்போடும் மார்பகத்தைத் தடவிக் கொண்டேயிருந்தாள்.

‘ரஞ், நான் வேணும்னு உன் நெஞ்சைத் தடவி விடட்டா?”

189