பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

னுடைய உயிரில் குழைத்துப் பதில் சொன்னாள் ரஞ்சனி!'நீங்க நிஜமாகவே என் சொந்த அப்பாவாக இருந்திருந்தால், இப்படி என்னே வன்மத்தோடே அறைஞ்சிருக்கவே மாட்டீங்க! என்று அன்று பழனியில் விதியாகக் கேட்ட பாபுவின் கேள்வி, அந்நேரத்தில் அவளது பெற்ற மனத்திலும் ஒலித்தது.

“தாயே, சத்தியம் பேசவேண்டிய நேரம் இது; என்னோட சொந்த அப்பா யாராம்? சொல்லு, அம்மா!".

ரஞ்சனி விதியின் நாயகி ஆனாள்; சிரித்தாள்; விதியாகச் சிரித்தாள்; வினையாகவும் சிரித்தாள்: டக்கென்று எழுந்தாள்: கவனமாக நடந்து, அந்த ஏலக்காய்க் காப்பிக் கோப்பையை எடுத்தாள்; அந்தக் காப்பியைப் பருக முனைந்தாள்.

பாபு, ‘ என்னோட கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டு, நீ அந்தக் காப்பியைக் குடிக்கலாம்!’ என்று ஆணையிட்டு, அந்தக் காப்பிக் கோப்பியைப் பறித்துக்கொண்டான்:

‘உன் சொந்த அப்பா மிஸ்டர் மகேஷ்தான், பாபு: அலறிக் கதறினாள் ரஞ்சனி!-பாபுவைப் பெற்ற அன்னை ரஞ்சனி!...

‘ஐயையோ...தெய்வமே!-பாபு தலையில் அடித்துக் கொண்டு ஓலமிட்டான். தாயிடமிருந்து பறித்துக்கொண்ட அந்தக் காப்பியை இப்போது அவன் குடிகக முனைந்தான்.

‘பாபு, அந்தக் காப்பியிலே விஷம் கலந்திருக்கேன்! ஐயையோ!...குடிச்சிடாதேப்பா!...பாபு...இந்த ஒரேயொரு வரத்தைமட்டும். நீ தந்திடு, போதும்! பாபு...பாபு ஒல மிட்டுப் பாய்ந்து அந்தக் கோப்பையை இப்போது அன்னை கைப்பற்றினாள்:"பாபு, பத்து வருஷத்துச் சோகக் கதையை என் வா யாலேயே சொல்விட்றேன்; அதுதான் நியாயம், தருமம்: சத்தியம் பேசவேண்டிய நேரம் இல்லையா, பாபு?—

199