பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றத்தில் வெயில் கண் சிமிட்டுகிறது

“ரஞ், எங்கே இருக்கிறாய்?”

“உங்க பக்கத்திலே!”

“எங்கே இருந்தாய், ரஞ்?”

“உங்க பக்கத்திலேயேதான்!”

“வெளி குட், மை டியர்!”

“தாங்க் யூ, அத்தான்!”

“உன்கிட்டே மிஸ்டர் மகேஷைப் பற்றிச் சொல்லிக்கிட்டிருத்தேன்.”

“ஓ! புரிஞ்சுதுங்களே!”

“பேஷ்!” என்று புன்னகையை மாற்றாமல் சொன்னார், ரஞ்சித்.

காலைச் செய்திப் பத்திரிகை சூடான காற்றில் சூடு பறக்கப் படபடத்துக் கொண்டிருக்கிறது!---பாரதத்தின் புதிய பிரதமமந்திரியாகப் பதவியேற்றிருந்த இந்திராகாந்தி தலைநகரிலே ஜனதா ஆட்சியின் அவலங்களைச் சாடியிருந்தார்!

தோட்டக்காரக் கிழவர் சோமையா எடுத்து வந்து போடும் பத்திரிகையைப் புத்தம் புதிதான ஆர்வத்துடிப்புடன் கூந்தல் நீர் சொட்டச் சொட்ட மேலோட்டமாகப் பார்த்தால்தான் ரஞ்சனிக்கு நிம்மதியாக இருக்கும்; காப்பியும் கையுமாக விரைந்து மாடிக்குச் சென்று, கணவரை எழுப்பி, வாய் கொப்புளிக்கச் செய்து, காப்பியை ஆற்றிக் கொடுத்துக் கொண்டே அன்றைய முக்கியச் சேதிகளை அவள் வாயாலேயே ஒரு தனி லாகவத்துடன் தெரியப்படுத்துவதில் அவளுக்கு என்றுமே ஓர் ஈடுபாடு உண்டு. அப்புறம் தான், மற்றக் காரியங்களில் மனம் செலுத்த அவளுக்கு மனம் வரும்.

19