பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று அன்போடு வரவேற்றாள். உடன் நின்றுகொண்டிருந்த அந்தப் புதிய பெண்ணையும் அன்பிற்குக் கட்டுப்பட்ட தமிழ்ப் பண்பாடு குலுங்க இன்முகத்துடன் உள்ளே வரும்படி அழைத்தாள். எதிர்ப்புறத்துப் புல்வெளிக்குக் கரைகட்டிக் கண்சிமிட்டிச் சிரித்த பூச்செடிகளைத் தழுவித் தவழ்ந்து வந்த வாடைக் காற்று அவளுக்கு அப்பொழுது வெண்சாமரம் வீசத் தொடங்கியது நல்லதாகப் போப் விட்டது!-உள் மனத்தின் குறுகுறுப்பு அடங்கிக்கொண்டிருக்கவேண்டும்!

இந்தப் புதுமைப் பெண்யாராம்? வெளிக் காற்றில் சூடு கூடுகிறது.

மகேஷ் ஏனே தலையைத் தாழ்த்தியவராக நின்றார் : கண்களும் தாழ்த்துவிட்டிருந்தன.

ரஞ்சனியின் மனத்தை என்னவோ செய்தது. கல் பட்டு, நீரலைகள் சிதறுவது உண்டல்லவா?- அப்படி, அவள் மனத்தில் என்னவெல்லாமோ நினைவுகள், எப்படி யெல்லாமோ சலனம் கண்டன: சலனம் அடைந்தன. மனச்சலனத்தைத் திசை திருப்பவோ என்னவோ, காலடிக் சத்தம் கேட்கவே, அவள் திரும்பினாள், ரஞ்சனியின் ஊகம் என்றைக்குத்தான் பொய்த்ததாம்?-"அத்தான் , தம்ம மகேஷ் வந்திட்டாருங்க, ‘ என்று சொன்னாள்.

தமது அருமை ரஞ்சனியைப் பார்த்த அதே கண் களால் மகேஷையும் பார்த்தபடி, ரஞ்சித் “வாங்க, வாங்க,’ என்று சவனச் சிரிப்புடன் முகமன் மொழிந்தார்; பெண் ஒருத்தி உடன் நின்ற விவரத்தை அப்போதுதான் அவரால் உணரமுடிந்தது; அந்தப் பெண்ணப் பார்த்ததும், எடுத்த எடுப்பில் அவள் கேரளத்துப் பூஞ்சிட்டு என்பது அவருக்குப் புரிந்தது. அவள் பக்கம் பார்வையை மடக்கி, வரணும் என்று அவளேயும் தம் பங்குக்கு வரவேற்றார்.

68