பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

105



இன்னொரு விவரமும் இப்போது அவளுக்கு நெஞ்சில் நின்றது. கொன்றைப் பூக்களின் அர்ச்சனையை ஏற்றபடி நின்றாள் அவள். கொண்டைச் சாமந்தி கொள்ளை வாசனையை இறைத்தது. நினைவில் குதித்த சிந்தனையை அவள் மறக்க மாட்டாள். வேழநாட்டரசன் விஜயேந்திரன் தர்ம சிந்தையுள்ளவன் என்றும் பெரிய கொடையாளி என்றும் நல்லறிவு படைத்த இளைஞன் என்றும் அவள் கேள்விப்பட்டாள். தன் தந்தைக்குப் பணிந்து முறையாய்த் திறை செலுத்த ஒப்பாததன் இயல்புதனை அவளால் ஒரளவு அங்கீகரிக்கவும் சம்மதித்தது, அவளது பெண் மனத்தின் உள்ளுணர்வு.

இளவரசியை எதிர் கொண்டழைக்க அவளது அந்தரங்கச் சேடி ஆரவல்லி வந்தாள். பிரசாதத் தட்டை வாங்கிக் கொண்டாள்.

அப்போது, அங்கு மறித்து ஓடிவந்தாள் நாதசுரபி, அவளைப் பின் தொடர்ந்து ஓடிவந்த படைத்தலைவனை ஜாடை காட்டிப் போய்விடப் பணித்தாள் கன்யாகுமரி.

நாதசுரபி “இளவரசி வாழ்க!” என்றாள். குறும்பான பார்வை, கண் நிரம்பிய அழகு ராஜகளை கொண்ட பாவனையில் அவள் விளங்கினாள்.

“ஒஹோ, நீதான் நாதசுரபியோ?” என்று மிகவும் நிதானமாக விசாரித்தாள் இளவரசி.

தன் பெயர், தன்னைப் பார்ப்பதற்கு முன்னதாகவே ராஜகுமாரிக்கு எங்ஙனம் தெரிந்தது என்ற அதிசயத்தில் விரிந்த கயல் விழிகளால் கன்யாவை அளந்தாள்.

“ஆமாம், இளவரசி!”

“சரி. நீ இங்கே வந்த காரணம்.” என்று சுருக்கிக் கொண்டாள் கன்யா. நாதசுரபி பற்றிய ஏனைய விவரங்கள் தனக்கு