பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அந்த நாய்க்குட்டி எங்கே?


காரிலே கொண்டாந்தோம். இத்தனை நாளாகத்தான் உனக்கு சுய நினைவே வரல்லியே! இனியாச்சும் நடந்த கதையையெல்லாம் மறந்திடு. மத்தியானத்துக்கு இந்த ஊரிலே மாரியம்மன் தேர் திருநாள் நடக்குதாம் – அதைப் படம் பிடிக்கப்போறாங்க எங்க அப்பா. சினிமா கம்பெனிக்காரங்க கூட வந்திருக்காங்க. இளைஞர் சங்கத்திலே தங்கியிருக்காங்க, நீயும் நானும் கூட கொஞ்ச நேரம் நடிக்க வேணுமாம். ‘வசந்த பைரவி’ சினிமாவுக்காக...! அதோ அப்பா காரிலிருந்து இறங்குறாங்களே!” என்றாள் பூங்கோதை, சிரிப்பு வெள்ளத்தில் அன்பின் அலைகள் ஆர்ப்பரித்தன.

தீப்பொறி தோன்றி மறைந்தது.

பூபாலன் சிலைபோல அப்படியே மயக்க நிலையில் நின்று விட்டான்.

“பூபாலா, மறுபடியும் உன் கண்ணிலே கண்ணீர் இருக்குதே? நீ அழுதா, நானும் அழுவேன். நீ அழாதே, அண்ணா”.

“பூங்கோதை, நம்பளோடே என் நாய்க்குட்டியும் நடிக்க வேணுமின்னு ஆசை வைச்சிருந்தேன். அது நிறைவேறலியேன்னுதான் வருத்தமாயிருக்குது..” என்று சொல்லிவிட்டு விம்மினான் அவன்.

அதே சமயம்–

“பூபாலன், இதோ பார் ஒரு நாய்க்குட்டி’ என்று கூப்பிட்டு அவனிடம் ஓர் அழகிய நாய்க்குட்டியைக் கொடுத்தார் பூங்கோதையின் தந்தை.

‘ஊஹூம், இது எனக்கு வேண்டவே வேண்டாம் என் நாய்க் குட்டி இல்லை இது. ஒரு தரம் நான் பட்டபாடு, அனுபவிச்ச வேதனையெல்லாம் போதும்!” என்று சொல்லிப் புலம்பினான் அவன்.

மத்தியானம்–