பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


கலைஞனும் கடையனும்

கவர்ச்சியை ரசிப்பவன் கலைஞன் ஆகிறான். கவர்ச்சியை ருசிப்பவன் கடையன் ஆகிறான். கஷ்டங்களை அடைகிறான். மனதால் பெறும் மகிழ்ச்சியோ நீடிக்கும். உடலால் பெறும் மகிழ்ச்சியோ உடலை விரைவில் உருக்குலைக்கும்.

Ο O O

அரசியலும் விளையாட்டும்

அரசியலில் விளையாட்டு என்பது சிகரெட்டில் தீ வைப்பது போல! விளையாட்டில் அரசியல் என்பது வீட்டுக்குத் தீ வைப்பது போல!

Ο O O

கண்ணான தூண்

சக்தியுள்ள ஓர் ஆண்
சமுதாயத்தின் தூண்.
சக்தியுள்ள ஒரு பெண்
சமுதாயத்திற்கு கண்.

Ο O O

குத்துச் சண்டை வாழ்க்கை

வாழ்க்கைஎன்பது ஒருவர் எமனோடு போடுகிற குத்துச் சண்டை மாதிரி. எமன் முகத்திலே குத்திக் கொண்டு இருக்கும் வரைக்கும் சந்தோஷம்தான். ஜெயிச்சுகிட்டு இருக்குற வரைக்கும் சண்டை