பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


நினைக்கிறவர்களே சமுதாயத்தில் அதிகம்பேர் இருக்கின்றார்கள். இப்படி நினைத்து வாழ்பவர்கள் மட்டும் நிம்மதியாக வாழ்கிறார்களா என்ன? இல்லையே! ‘ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதான் வைத்திருக்கிறான்’ என்ற பழமொழி எவ்வளவு உண்மையான மொழி!

Ο O O


பணம் தரும் பரிசு

ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கும் ஏழைகள், வந்த பணத்தையெல்லாம் வாய் ருசியான உணவுக்கும் விரும்பியவாறு உடைக்கும் மீதியை உல்லாசத்திற்கும் செலவு செய்து விட்டு ஜாலியாக வாழ்ந்து விடுகின்றார்கள். பணம் இல்லாத போதுதான் அவர்களுக்குக் கவலையே தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் மகிழ்ச்சி தான். ஆனால் பணக்காரர்களுக்கோ எல்லாம் இருந்தும், எல்லா வசதிகளுக்கு வாய்ப்பிருந்தும் எல்லா நேரங்களிலும் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் கவலையாக அல்லவா இருக்கிறது! எல்லாம் பணம் தரும் பரிசு. நெஞ்சிலே உள்ள நிம்மதியை நீக்கிவிட்டு பணம் நெஞ்சிலே அமர்ந்து கொண்டு ஆட்டிப்படைக்கிறது அதுதான் பணம் தரும் பரிசு போலும்.

Ο O O