பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மாகஎல்லோர்க்கும் தெரிகிறது! அதைப் புரிந்து கொள்ளவும் பிறவி ஞானம்தான் தேவைப்படுகிறது.

Ο O O

உழைப்புத் துடுப்பு

தோணிக்குத் துடுப்பு போல, மனிதனுக்கு உழைப்பு அவசியம்.

Ο O O

இதுதான் உலகம்

பிறருடைய செளகரியத்தைக் காப்பாற்றுவதற்காக, நாம் அனுசரனையாக நடந்து கொள்கிற வரையில் நமக்கு மரியாதை கிடைக்கிறது. நமது காரியம் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறவர்கள், தங்கள் செளகரியம் குறையும்பொழுது கொள்கின்ற கோபம் இருக்கிறதே அதை அனுபவிக்கும் பொழுது தான் உணர முடியும். சுயநலத் தாண்டவம் தான் இன்று மனிதர்களிடையே தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.

Ο O O

ஆட்டுக்கு வால்

‘மற்றவர்கள் எப்படிப் போனால் எனக்கென்ன? என் வரைக்கும் சரியாக இருந்தால் சரி’ என்று