பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


கோட்சே புகழ்

இந்த உலகத்தில் தோன்றியவர்கள் அனைவரின் குறிக்கோளுமே புகழுடன் வாழ வேண்டும் என்பது தான். இப்படிப் ‘புகழ்’ பெறுவதில் இரண்டு வகை இருக்கிறது.

காலமெல்லாம் கஷ்டப்பட்டுப் பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த காந்தி புகழ். ஒரே நொடியில் காந்தியை சுட்டுக் கொன்று விட்டு உலகமெங்கும் தன்னைத் தெரிய வைத்துக் கொண்ட கோட்சே புகழ் இப்பொழுது தம்மை வெளிப்படுத்திக் காட்ட முயல்கின்ற கோட்சே நோக்கமும் கோட்சே செயல்களும் தான் மக்களிடையே நிறைந்து வருகிறது. என்ன செய்வது? இதுதான் காலத்தின் கஷ்டம்.

Ο O O

பிறவி ஞானம்

மக்களிலிருந்து ஒருவனை மேம்படுத்திக் காட்டுவது அறிவு, அறிவின் முதிர்ச்சியே ஞானம் என்பார்கள். ஞானத்தில் பல வகை உண்டு. அது பார்வை ஞானம், கேள்வி ஞானம், படிப்பு ஞானம், அனுபவ ஞானம், இந்த ஞானங்கள் தாம் ஒருவனை மேதையாக்குகிறது. மேன்மைப்படுத்துகிறது. இத்தனை ஞானங்களையும் ஆட்டுவிக்கும் ஒன்றிருக்கிறது. அதுதான் பிறவி ஞானம்! பிறவி ஞானம் தான் அறிய முடியாத ரகசியமாக அதிசய-