பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

 நமது ஜனநாயகம்

ஒரு பகுதியில் பல சிறு சிறு கிணறுகள் இருக்கின்றன. அங்கே தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊறுகிறது. மக்களுக்கு உதவி புரிகிறது. திடீரெனப் புதியதாக ஒரு கிணறு உருவாகிறது. பெரிய கிணறு. அதுவும் அதிக ஆழமுள்ள கிணறு புதிய கிணற்றுக்கு எல்லா நீரும் வந்து விடுகிறது. சிறுசிறு கிணறுகள் நீரின்றி காயத் தொடங்குகின்றன. ஏழை ஏழையாகவே போகவும், பணக்காரன்பணக்காரனாகவே போவதும் இப்படித்தான். இந்த மாதிரிதான் நமது ஜனநாயக சமுதாய அமைப்பு இருக்கிறது.

Ο O O

சிந்தனையின் சிலிர்ப்பு

வயதும் உடலும் முதிர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டே இருக்கிறோம் என்பதுதானே அர்த்தம் முடிந்து போவதற்குள் வந்து போன அடையாளத்திற்காக நாம் எதாவது ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய வேண்டாமா?செய்தாகத்தான் வேண்டும். அதுதான் வாழ்க்கை லட்சியம்.

Ο O O