பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31 வாழிய பனைத்தோள் வீரனென்று வாழ்த்தப்பட்டவனே ஊழிகளைக் கடந்து உலவும் மேலோனே ஊழையும் வெல்லும் உலக நாயகனே வாழிய ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


32. ராமாயண பாராயண வீணா கானப் புலவனே நின் அனுபூதி கொண்டு அனுபூதி சொன்னேன் எல்லா நலங்களும் எல்லோர்க்கும் தருக தருகவே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே