பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.வாலியின் இளவலுக்கும் அயோத்தி முதல்வனுக்கும் நட்பெனும் பாலமிட்ட நாயகனே அதனை அங்கியே சான்றாக உறுதி செய்த உத்தமனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


5. நங்கநல்லூர் நாதனே ராமதுதனே சிங்களத்துக்கு பந்தனம் இட்ட தீரனே பிங்களக் கண்ணனே பிராட்டியின் தனையனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


6 அங்கதன் நீலன் சாம்பன் அனுமன் இடையே அலைகடலைத் தாண்டுவது யாரென்று கேள்விக்கு விடையே சாம்பன் உணர்த்த உணர்ந்ததளபதி அனுமனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே