பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை 129 சக்தியின் மூலமாகத்தான் அதனே அடையமுடியும். இந்தச் சட்டத் தித்குப் புறநடையே (விலக்கே) இல்லை. நம்முடைய மனிதத் தன் மையை நாம் மாசுபடுத்திக்கொள்ள விரும்பினுல் கடவுள் நம்மை அழித்து விடுவாரே யல்ல்ாமல், போனுல் போகட்டும் என்று விட்டு வைத்திருக்க மாட்டார். - எனவே, எங்கெங்கே அரசாங்கம் நமக்குத் தந்திருக்கின்ற சலுகைகளை நம்முடைய சக்தியோடு பொருத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ, அந்த இடங்களிலெல்லாம், அந்தச் சலு கைகள் புளித்துப் போவதுடன், நமக்குத் தீமை செய்யும் நிலைக் களன்களாகவும் அமைந்துள்ளன என்பதை நாம் காண்கின்ருேம். போலீசார்கள் தமக்குள்ள உரிமைகளை வைத்துக்கொண்டு, கொள்ளக்காரர்களாக மாறுவார்களேயானல், அவர்களுடைய கொடுமைகளைத் திருத்துவதற்கு வழியே இல்லாமல் போய்விடும். : அரசாங்கத்தினுடைய தனிப்பட்ட சலுகைகளே அனுபவித்து வரு கின்ற கிராமக் குழுக்கள் ஒற்றர் குழுவாக மாறிவிடுமேயானல், அந்தக் கிராமத்திற்கு அதைவிடப் பெரிய தலைவலி வேறு வேண்டிய தில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்குப் பிரத்தியேகமான சலுகை கள் கொடுக்கப்பட்டால் நம்மிடையே அது வெறுப்பையும், பொரு மையையும் வளர்க்கத் தொடங்கி விடுகிறது. ஆளுல் நம்மிடையே சக்தியும் பலமும் வேண்டுமான அளவுக்கு இருந்திருக்குமேயானுல், இத்தகைய பிழைகள் நிகழ்ந்திர்ா. அப்போது இந்தச் சலுகைகளைப் பெறவும், அனுபவிக்கவும் நாம் சக்தியுடையவர்களாக ஆகியிருப் போம். அந்த நேரத்தில் இந்தச் சலுகைகள் சரணடைவதற்குரிய வழிகளாக ஆக மாட்டா. இவ்வாறு சொல்வதால் நம்முடைய வேலைத் திட்டங்களுக்கு அரசாங்கம் தரும் உதவிகளை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது கருத்தன்று. இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன பென்ருல், கம் மேற்கொண்ட வேலைகளில் முழு மூச்சாக, முழு மனத்துடன் ஈடுபடக் கட்டுமேயானல், யார் எந்தப் பொருளை நமக் களித்தாலும் அகனே எற்றுக் கொள்ள நமக்குத்தகுதியுண்டு என்ப தேயாகும். இது எதுபோல் இருத்கிறதென்ருல், காளி தேவிக்கு ஒரு எருமை மாட்டைப் பலி கொடுக்கத் தன்னுல் முடியாது என்று தெரிந்திருந்துங்துட, எருமையைப் பலி கொடுப்பதாக ஒப்புக் கொண்ட ஒருவன் இறுதியில் அந்தத் தேவி, எருமை இல்லாவிட் டாலும், ஒரு வெட்டுக் கிளியையாவது எனக்குக் கொடு’ என்று கேட்டபோது, வெட்டுக் கிளியைக் கூட நீயே சம்பாதித்துக்