பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்ள்ை. 19 I . டைடனிக் கப்பலில் தங்கட்கு ஏற்பட விருக்கும் ஆபத்தைக் கண்டு கவலைப்படாமல், பிறர் உயிரைக் காப்பாற்ற முயன்ற மக்கள் அனைவரும் பக்தி கிறைந்த கிறிஸ்தவர்கள் அல்லர். அவ்ர்களில் பலர் விஸ்திகவாதிகளாகவும், கடவுளைப் பற்றிக் கவலை கொள்ளாதவர்களாகவும் இருந்திருக்கலாம். தங்கள் சமயம் வேறு என்று கூறிக் கொள்வதால் மட்டும் அவர்கள், பரம்பரையாக வந்த ஆன்மீத. மரபிலிருந்து விடுபட்டுப் போய்விட முடியுமா? ஒரு நற் காரியத்துக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்பவர், அந்த மக்கள் அனைவர் பொருட்டாகவும் ஒற்றையாக கின்று போராடுகிருர் என்றுதான் கொள்ளவேண்டும். மக்கட் கூட்டம் தங்களுடைய அறியாமை காரணமாக அந்த ஒருவரை எள்ளி நகையாடலாம் ; என்ருலும் அவருடைய முயற்சியின் பயனே அவர்கள் அனைவரும் அனுபவிக்கிருர்கள். - ஆண்டவன்பாற் கொண்ட பக்தியின் ஓர் உறுப்பாகம் பிறருடைய துயரத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலோ அன்றிப் முயற்சியோ கம்மிடம் பரவலாகக் காணப்படவில்லை என்ற உண்மையை, அது எவ்வளவு மனத்திற்கு வெறுப்பை அளிப்ப தாயினும், நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். பக்தியின் உணர்ச்சிப் பகுதி கல்ல வலுவடைந்தும், அதன் பல்வேறு வடி வங்களில், பல் வேறு நிலைகளில் நம்மிடம் நிறைந்தும் காணப் படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனல், தொண்டு மனப்பான்மை, தன்னலத் தியாகம், துயரத்தை எளிதாகப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை அவ்வளவாக கம்மிடம் காணப்படவில்லை. தெய்வீக அன்பினுல் ஏற்படும் இன்பத்தை மட்டும் நாம் விரும்பி ஏற்றுக் கொள்கிருேமே தவிர, அதில் வருகின்ற துன்பத்தை விரும்புவதாகத் தெரியவில்லை. வேறு ஏதாவது ஒரு பயனைக் கருத்திற் கொண்டு துன்பத்தை ஏற்றுக்கொள்வதில் ஆன்மீகம் ஒன்றுமில்லை. அன்பு காரண மாகத் துன்பத்தை ஏற்றுக் கொள்வதில்தான் உண்மை ஆன்மீகம் இருக்கிறது. ஒயாது செல்வந் தேடும் மனிதன் அடைகின்ற துன்பத்திலும், மறு உலகத்தில் இடம் தேடுவதற்காகக் கடுந்தவம் . இயற்றுபவன் அடையுந் துன்பத்திலும் நிறைவு இல்லை; அவை அவனுள்ளே இருக்கும் வறுமையைக் காட்டுகின்றன. அன்பு காரணமாக வெளிப்படும் தியாகத்தில்தான் ஆன்மா எல்லையற்ற அளவிற்கு உயர்கின்றது;அதன் பயணுக வலிமை, இன்பம் ஆகிய வறறைப் பெற்ற வாழ்வு, மரணத்தையும் வெல்வதற்கு உதவி புரிகின்றது. -