பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சத்தியத்தின் அழைப்பு х பிற உயிர்கள் தயாரித்த உணவை உண்ணுகின்ற ஒட்டுண்ணி கள் (Parasites) தவாரான உணவை உண்ணும் செளகரியத்திற் காக, தாமே இயல்பாக உண்டு சீரணிக்கும் சக்தியை இழந்துவிடு கின்றன. மனிதனுடைய வரலாற்றிலும், சக்தியைப் பயன்படுத் தாமல் விட்ட குற்றமே, அவனுடைய வீழ்ச்சிக்குக் காரண மாயிற்று. பிறருடைய உழைப்பில் வாழும்பொழுதுதான் மனிதன் ஒட்டுண்ணி யாகிருன் என்பதில்லை. புறத்தில் உள்ள சந்தர்ப்பங் களுடன் விலக முடியாதபடி தன்னைச் சேர்த்துக் கட்டிக் கொண்ட பொழுதும், எவ்வாறு பொருள்கள் இருந்தனவோ, இருக்கின்றனவோ அவற்றுடன் கட்டிக்கொண்டு வேறு சிறு முயற் சியும் இல்லாமல் நீர் போகும் வழியில் மிதந்து செல்லுங் காலத் திலும் அவன் ஒட்டுண்ணி யாகிருன். புறச் சூழ்நிலைக்குத் தன்னை முற்றிலும் தியாகம் செய்துகொள்ள, அகத்தின் ஆண கிடைப்ப தில்லை. இதன் பயனுக, மனிதன் இச்சா சக்தியை இழந்து, வெறும் பழக்கத்திற்கு அடிமையாகி, ஒருவகையான ஒட்டுண்ணி யாகி விடுகிறன். பார்வைக்கு இயலாதவை போல் தோன்றுகிற காரியங்களைக்கூடச் செய்து முடிக்கும் சக்தி அவனுக்குக் கொடுக் கப்பட்டிருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் இழந்து விடுகிருன். மனிதனின் விதிப்ாக வுள்ள வளர்ச்சி வழியையும் அவன் இழந்து விடுகிருன். இந்த முறையில் பார்த்தால் எல்லாக் கீழ் விலங்குகளும் ஒட்டுண்ணிகளே. சூழ்நிலைக் கேற்ப வாழ்க்கை கடத்துகின்ற அவை, இயற்கையின் தேர்வு முறைப்படி வாழவோ, சாகவோ செய்கின்றன. இயற்கையின் ஆணைப்படி அவை முன்னேற்றத் தையோ அன்றிப் பின்னேற்றத்தையோ அடைகின்றன. அவற் றின் மனம், வளரும் சக்தியைப் பெருமையினுல், வளராத குறளே ாகவே இருந்து விடுகிறது. பல்லாயிர மாண்டுகளாகத் தன் கூட்டை ஒரே ஒரு முறையில்தான் தேனி கட்டிக்கொண்டு வரு கிறது; இத தவிர வேறு வழியை அது அறிய வில்லை. இந்த முறையில் தேனிக்கட்டு ஒரு அழகிய இலட்சிய வடிவத்தை அடைந்துவிட்டது என்ருலும், எவ்வித மாறுபாடும் இல்லாத கூட்டு வாழ்க்கைக்கு அவை அடிமையாகி விட்டன. கீழ் கிலேயிலுள்ள உயிர்களைப் பொறுத்தமட்டில், இயற்கை, விநோதமான பழக் கத்தையே காட்டி வருகிறது. தன்னுடைய புடவைத் தலைப்பில்