பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 அனைத்துலக மனிதனை நோக்கி கொள்கிறேன்” என்று கூறியிருப்பேன். அவர்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். ஆணுல் உதவி செய்ய வேண்டும் என்று கிஜனப்பது மட்டும் உதவியாகி விடாது. முட்டாள்தனமான உதவியைப் போல ஆபத்தானது வேறு எதுவுமில்லை. ஒரு முறை கிராமத்தார்கட்கு உதவி செய்வதற்காக நகரித்து இளைஞர் சிலர் சென்றனர். உடனே கிராம மக்கள் அவர்களே எள்ளி நகையாடி * இதோ கால் ரூபாய்ப் பெரிய மனிதர்கள் வருகிருர்கள் ' என்று கூறி விட்டனர். இந்த நகர இளைஞர்கட்கு கிராமிய மொழியும், அவர்களுடைய பழக்க வழக்கங்களும் தெரியாது என்பதில் புதுமை ஒன்றும் இல்லை. - • , ". இதற் கேதாவது செய்தாக வேண்டும். என்னுடைய மகனே யும், சந்தோஷையும் விவசாயம், பால் பண்ணை முறைகளைக் கற்றுக் கொள்வதற்கு வெளிநாடுகட்கு அனுப்பினேன். பல்வேறு வழிகளில் சிந்திக்கவும் வேலை செய்யவும் தொடங்கினேன். அந்த கிலேயில்தான் இந்த வீட்டை வாங்கினேன். ஷிலைதா வில் தொடங்கிய பணியை இங்கே தொடர்ந்து செய்ய முற் பட்டேன். இடிந்துபோன இந்த வீடு பேய்க் கோட்பட்டதாகக் கூறினர்கள். இதனைப் பழுது பார்ப்பதற்கு ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்தேன். பின்னர்ச் சிறிது காலம் ஓய்வாக இருந்தேன். * இந்த வீட்டை விற்று விடு ' என்று ஆண்டுரூஸ்' கூறிஞர். * இந்த வீட்டை நான் வாங்க நேர்ந்ததால் இதில் ஏதாவது ஒர் உட் கருத்திருக்க வேண்டும். என் வாழ்நாளில் கொண்டுள்ள இரண்டு குறிக்கோள்களில் ஒன்று இதன் மூலம் பூர்த்தியாகும் ' என்று எனக்குள் சிந்தித்தேன். அது எவ்வாறு எப்பொழுது நடைபெறும் என்று எனக்குத் தெரியாது. நல்ல நேரத்தில் வறண்ட பூமியில் விதை தெளிக்கப்பட்டாற்கட்ட அது திடீரென்று முளைக்கத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் அப்படிப்பட்ட குறிகள் ஒன்றுங் தோன்றவில்லை. என்றலும் மெள்ள அந்த விதை முளை விடத் தொடங்கியது. என்னுடைய நண்பர் எல்ம் ஹர்ஸ்ட் பெரிய அளவுக்கு உதவி புரிந்தார். அவர்தாம் இந்த இடத்தை ஒரு தனிப்பிட்ட பணியைச் செய்யும் களமாக மாற்றிப் படிப்படியான முன்னேற் றம் காணுமாறு செய்தார். இதனைச் சாந்தி நிகேதனுடன் இணைப்பது முறை யன்று. - இன்னும் ஒரு வார்த்தையுடன் என் உரையை முடிக்கிறேன். மக்களின் அகத்திலிருந்து ஒர் ஆற்றல் வேலை செய்யத் தொட்ங்கு