பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் யுகம் சந்திப்பதனுல் ஏற்பட்ட முரண்பாடாதலின், புறத்திலேயே பல தங்கிவிட்டன. அவர்களுடைய செல்வாக்கு நம்முடைய ஆட்சி முறையில் மிகவும் அதிகமாகச் சென்று தைத்தாலும்கூட: கம் முடைய மனம் வரையில் அது செல்ல முடியவில்லை. உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரும் பர்விய மொழியைப் மிகுதியாகப் பயன் படுத்தினர்கள். அதனுடைய சொற்கள் பல வங்காளி மொழியில் புகுந்தன. என்ருலும், அந்தக் காலத்தில் தோன்றிய வங்காள இலக்கியத்தில் பாரnக மொழியின் கிலயான செல்வாக்கு ஒன்றும் காணப்படவில்லை. அக்கால வங்காள இலக்கியங்களிலோ, உட்பொருளிலோ முஸ்லீம் இலக்கிய மரபுகள் ஒன்றும் இல்லை. இதற்கு ஒரே ஒரு புறநடை என்ன்வென்ருல் பாரத் சந்திரரின் 'வித்யா சுந்தர்' தான். அந்த நூலின் சொல்லாட்சியில் பர்ஸிய இலக்கியத்தின் மென்மையான சாயல் ஓரளவு உள்ளது. எனவே, இந்த இந்திய மண்ணில் வளைந்து கொடுக்காமல் நன்கு பதிக்கப்பெற்ற இரண்டு காகரிகங்கள் அணித்தணித் தாகத் தொங்கிய தலைகளுடன் வளர்ந்தன. இவை இரண்டி ணிடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை யென்று சொல்ல முடியாவிட்டாலும் அந்த் இடை கிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட அள விலேயே நடைபெற்று வங்தது. முஸ்லீம்களுடைய உடல் வன்மை, இங்ங்ாட்டில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கினுலும் கூட, மக்களி னுடைய சிங்தனு சக்தியையும், ஆக்க உணர்ச்சியையும் அது துண்டிவிட இல்லை. மற்ருெரு கருத்தையும் கவனிக்க வேண்டும். இந்தியாவின் வெளியிலுள்ள பிற பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் ஹிந்துஸ்தானத்தில் வங்த பொழுதும்கூடப் புற உலகத்தை கோக்கி கம்முடைய மனக் காட்சி விரியுமாறு அவர்கள் செய்யவில்லை. தாங்கள் குடியிருக்கும் இடங்களே கிர்மாணித்த பிறகு, தாங்கள் தாண்டி வந்த அங்த வாயிலே அவர்களே அடைத்து விட்டார்கள். என்ருே ஒரு சமயத்தில் புதிதாக வருகின்ற படையெழுச்சிகளுக்கு இந்த வாயில் திறந்த போதிலும் கூட, அதன் மூலமாக நாம் புற உலகத்தைக் காணக்ககூடிய முறையில் ஒன்றும் கிகழவில்லே. இதல்ைதான் நம்முடைய உள்ளுர்க் கோயிலின் வாயில்ல் அமர்ந்து வெட்டிப் பேச்சிலும், சீட்டாட்டத்திலும் பொழுதைப் போக்கி, மிகக் குறுகிய ஓர் உலகத்தில் வாழ்ந்து வருகிருேம். பின்னர் பிரிட்டிஷார்கள் வந்தனர். வெறும் மனிதர்களாக வாராமல் ஐரோப்பாவின் புத்துணர்ச்சியின் அடையாளங்களாக அவர்கள் வந்தனர். நம்முடைய வரலாற்றிலேயே பிரிட்டிஷார் 393