பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அனைத்துலக மனிதனை நோக்கி இதன் முடிந்த பயன் என்னவெனில், பையன் ஒன்றையும் கற்றுக்கொள்ள முடிவதில்லை. வங்காளியைத் தவிர வேறு மொழியை அவன் கற்காதிருப்பின், பள்ளிக்கடத்திற்கே அவன் போகாதிருப்பின், அவன் விருப்பம்போல், விளையாடவும், மரம் ஏறவும், குளத்திலும் ஆற்றிலும் நீச்சல் அடிக்கவும், மலர்கள் பறிக்கவும் இயற்கைக்கு ஆயிரமான தொல்லைகள் உண்டாக்கவும் ஆக, இவற்றிலாவது பொழுதை அவன் விருப்பப்படி கழிக்கமுடியும். இவ்வாறு செய்தால் அவனுடைய இளமை இயல்பையாவது திருப்திப்படுத்த முடியும். அதன் பயனகத் திடமான உடலுடன் மகிழ்ச்சியான மனத்தையும் பெறமுடியும். ஆனல், ஆங்கிலத் தைக் கற்றுக் கொள்ளச் செய்யும் பெரு முயற்சியில், அவன் அதனைக் கற்றுக் கொள்வதுமில்லை ; மகிழ்ச்சியடைவதுமில்லை; இலக்கியங் காட்டும் கற்பனை உலகில் அவன் நுழைவதற்குரிய சக்தியைப் பெறுவதுமில்லை; இவை இல்லாவிடினும், காட்சியளவில் உள்ள இயற்கை உலகில் நுழைவதற்குரிய காலத்தையாவது அவன் பெறுகின்ருனு என்ருல் அதுவும் இல்லை. அகத்தே உள்ள ஓர் உலகத்திற்கும் புறத்தே உள்ள ஓர் உலகத்திற்கும் ஆக இரண்டு உலகங்கட்குச் சொந்தமாகிருன் மனிதன். இவ்வுலகங்கள் அவனுக்கு உயிரையும், சுகாதாரத் தையும், வலிமையையும் தங்து, வடிவம், நிறம், வாசனை, இயக்கம், இசை, காதல், இன்பம் என்ற அலைகளாக அவனத் தாக்கி அவன் வாழ்வை மலரச் செய்கின்றன. இரண்டு சொந்த நாடுகளிலும் தங்க விடாமல் வெருட்டப்பட்டு அங்கிய நாட்டுச் சிறையில் வாடும் ஒருவரைப் போல நம் குழந்தைகள் இந்த அக, புற உலகங்களி லிருந்து வெருட்டப்படுகின்றன. குழந்தைகட்குத் தேவையான அன்பை, கிறைந்த அளவு கொடுப்பதற்காகவே, பெற்ருேர்களின் உள்ளத்தில் அன்பை கிறைத்தும், குழந்தைகள் கிடந்து உறங்கும். வகையில் தாய்மார்களின் மார்பை மென்மையாகப் படைத்தும் வைத்திருக்கிருன் இறைவன். குழந்தைகள் உடலமைப்பு மிகச் சிறியதாக இருப்பினும் வீட்டிலுள்ள காலி இடம் முழுவதுங்கட்ட அவர்கள் விளையாடுவதற்குப் لاقةii ذت تنع آتة تنل النتي బ్రీమత్స్). கம்முடைய பையன்களையும், பெண்களையும் அவர்களுடைய இளமைக் காலத்தை எங்கே சென்று கழிக்குமாறு விட்டிருக்கின்ருேம் ? பிற மொழியின் இலக்கணம், அகராதி என்பவற்றினிடையேயும், சுவை யற்ற, முடிவிலாத, பள்ளி வேலை என்னும் குறுகிய சக்திலேயும் அவர்களை விட்டிருக்கின்ருேம். r -