உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அன்னக்கிளி

அங்கு தத்தம் மிதந்து நீருடன் கலந்தது. அப்புறம் அங்கே ஆந்தை தென்படவேயில்லை. அலைகள் மட்டுமே கொந்தளித்துப் புரண்டு கொண்டிருந்தன.

திருமலை கெடுமூச்சுயிர்த்தான். அவனது படகு கரை நோக்கித் திரும்பியது.

14. திகைக்க வைத்த உண்மைகள்

திருமாறனின் திடீர் வருகையும், முத்துமாலை பற்றிய அவரது கோரிக்கையும், எச்சரிக்கையும், அமுதவல்லியின் உள்ளத்தில் குழப்பம் ஏற்படுத்தியிருந்தன. சுடு சட்டியில் விழுந்த உப்புக்கல் போல் சட படவென்று பொரிந்து தள்ளிவிட்டு அவர் அங்கிருந்து அகன்ற பிறகு வெகுநேரம் வரை அலங்காரி கவலை உருக்கொண்டவளாய் ஊஞ்சலில் சாய்ந்து கிடந்தாள்.

'திடீரென்று அந்த முத்துமாலை மற்றவர்கள் எண்ணத்தில் இடம்பெற்று உறுத்தத் தொடங்கியிருப்பது வியப்புக் குரியதுதான். இரவிலே எயில் ஊர் ஆந்தை அம் மாலைக்காகப் போராடினான். இப்பொழுது திருமாறன் வந்து மிரட்டிவிட்டுப் போகிறார். ஆகவே, முத்துமாலைக்கு ஏதோ தேவை ஏற்பட்டிருக்கவேண்டும்' என்று அவள் எண்ணினாள்.

அந்த முத்துமாலையை அவள் அடைவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது. எவ்வளவுதூரம் துணியவேண்டிருந்தது. அம் மாலைமீது அவளுக்கு ஏற்பட்ட ஆசை யினால் அவள் பாபங்கள் பலவும் செய்யத் துணிந்தாளே! ஆசை மிகுதியோடு அடையப்பெற்ற முத்தாரத்தை அவள்