அன்னக்கிளி
93
ஆந்தையைப் பிடித்து விடலாம் என்ற உற்சாகம் அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்பட்டது.
விம்மி விம்மி மேலுயர்ந்து பெரிதாகிப் பின் தாழ்ந்து, மீண்டும் பொங்கிப் பாய்ந்து, நுரைப் பூக்களை உலுக்கிப்பதுங்கித் தணிந்து, திமிர்கொண்டு எழுந்து, வெறி கொண்ட புரவிகள்போல் சாடும் அலைகளால் ஏற்றுண்டு, தள்ளுண்டு அவற்றோடு போராடி முன்னேறிக் கொண்டிருந்தான் எயில் ஊர் ஆந்தை.
ஒரு இடத்தில் வெள்ளிய அம்பு போல் ஒன்று பளீரிட்டது. வாலடித்தது. வளைந்து துள்ளியது.
'ஏய் சுறா!...சுறா மீன்! என்று பலரின் கூவல்கள் எழுந்து ஒன்றாகிக் குழப்பின.
சுறா மீன் வேகமாக வந்தது.
ஆந்தை வேகமாகக் கைகளை வீசிவீசி நீந்திக்கொண்டிருந்தான்
சுறா அவனை வட்டமிட்டது.
அவன் கைகளையும் கால்களையும் உதைத்துக்கொண்டு அலையோடு எழுந்தான் தாழ்ந்தான்.
அவனிடமிருந்து ஒரு அலறல் பிறந்தது.
சுறா அவன் தொடையைக் கவ்வியது. விட்டது.கால்களில் ஒன்றை அழுத்தமாய்க் கவ்விப்
பிடித்து அவனை உள்ளே உள்ளே இழுத்துச் சென்றது.