பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அன்னக்கிளி


அவ்வேளையில் அன்னக்கிளி அங்கே அப்படிப் புகுந்ததை அவள் விரும்பவில்லை. அன்னம் ஆர்வத்தோடு முத்துமாலையைப் பற்றி வினவியது அவளுக்குப் பிடிக்கவில்லை.

இப்போது எங்கே தீப்பற்றி எரிகிறது? ஏன் இப்படிக் கூவிக்கொண்டு ஓடிவந்தாய்?" என்று அவள் வெடுவெடுத்தான்.

முத்தாரம் பற்றிய வியப்பை ஒடுக்கிவிட்டு அன்னக் கிளி பரபரப்புடன் பேசலானாள்: 'அம்மா! அந்த மரங்களுக்கூடே புகுந்து, ஒரு மரத்தடியில் சிறு மூட்டையைக் கொண்டுபோய் வைப்பது யார் என்று தெரிந்துவிட்டது. உடனே நீங்கள் கீழே வந்தால் அவளைக் கையும் களவுமாகப் பிடித்துவிடலா....'

'அவளா?' என்று திகைப்புடன் கேட்டாள் அமுதம்.

'ஆம் அம்மா. நம் இல்லத்தில் ரொம்ப காலமாக வேலை பார்த்து வருகிற கிழவி பொன்னம்மாதான்!'

என்ன பொன்னம்மாவா?' என்று பதறினாள் பெரியவள்.

இப்பொழுது மூட்டையை எடுத்துக்கொண்டு அவள் அங்கே போயிருக்கிறாள்.' அன்னத்தின் பேச்சைக் கேட்டபடியே, சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்தாள் அமுதவல்லி. மரத்தடியில் சிறு மூட்டையை வைத்துவிட்டு நிமிர்ந்த உருவம் அவள் பார்வையில் பட்டது. உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற பரபரப்பு அவளைப் பற்றிக்கொண்டது. கையி-