பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

59


அறைந்ததுபோல் கேட்டது. அந்தச் சிரிப்பு, அந்தப் பேச்சொலி, அவை யாருடையவை என உணர்ந்த அன்னம் விலவிலத்துப்போனாள்.

9. அனல் ஊற்றான பூம்புனல்!

யவரின் உள்ளம்போல் கறுத்திருந்த இரவு நேரம் முழுவதும் கண்ணுறங்காது எவனுக்காகக் காத்திருக்தாளோ, வந்து விட்டான் என்று ஆசையோடு எதிர்பார்த்துக் கன்னெஞ்ச ஆந்தையின் குறுக்கீட்டால் ஏமாற்றம் அடைந்த பின்னரும் எவன் வருகையை விரும்பினாளோ, அந்தத் திருமாறன் வந்துவிட்டான் என்ற சொல் செவியில் புகுந்ததுமே, அமுதவல்லி புத்துயிர் பெற்றவள் போலானாள்.

அவள் உள்ளம் உவகையின் பெருக்கால் நனைந்தது, முகம் சிரிப்பால் மலர்ந்தது. எரிச்சலும் ஆத்திரமும் மறைந்தன. உணர்ச்சிக் கிளுகிளுப்பு பிறந்தது, குதித்துச் சுழன்றாடிக் கும்மி கொட்டிக் குதூகலிக்கலாம் போலிருந்தது அவளுக்கு. அதை அவள் கட்டுப்படுத்திக் கொண்டாள். அதற்கு அவளது அந்தஸ்தின் நினைவு தடையாக அமையவில்லை. 'அவர் என்ன நினைக்கமாட்டார்?’ எனும் எண்ணமே அவளை நிதானமாக நிற்க வைத்தது.

அவர் வந்ததும் முகம் கொடுத்து முறுவலித்துப் பேசாது முதுகு காட்டி நின்று பிணங்கிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு. அவரிடம் சண்டை பிடித்துச் சீற்றப் பேச்சு வீசவேண்டும் எனக் கருதினாள் ஒரு கணம். 'வா என்று அழைத்தபோது வராமல் இப்போது வந்ததேனோ? வந்த வழியே போமய்யா!' என்று