பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அன்னக்கிளி

 தகுந்த பதில்களை உரைத்தான் திருமலை. அவர்கள் வந்த காரணம் என்ன என்று அவர் வினா தொடுக்கும் வழி காணாதுபோகவே, அவனாக முக்கிய விஷயத்துக்கு வந்தான்.

'கொற்கைப் பட்டினத்திலிருந்து ஆட்சி புரிந்து வந்த சடையவர்ம பாண்டியன் இறைவனடி சேர்ந்ததும், கொற்கையை ஆளுவதற்கு அரச பரம்பரையினர் எவரும் இல்லாது போனதால், மதுரைப் பாண்டியனே அதன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதை நீங்கள் மறந்திருக்க முடியாது. கொற்கையைத் தலைநகராகக் கொண்டும், பிறகு திருநெல்வேலியைத் தக்லநகராக ஏற்றும் பாண்டிய மன்னர்கள் தனித் தனியாக ஆளத் தொடங்கியதால், பாண்டியப் பேரரசு சீர்குலைந்து சிதைந்து விட்டது என்பதையும் நாட்டில் உள்ள நல்லோர்கள் அறிவர். பாண்டியரின் பண்டைய புகழையும் கீர்த்தியையும் மீண்டும் நிலைநாட்டுவதற்காக நமது மன்னர் முயன்று வருவதும் உங்களுக்குத் தெரியும். இருந்தும் நீங்கள் பெரிய மரத்தின் கீழ் மண் அடியிலேயே இருந்து மரத்துக்கே ஊறு விளேவிக்கும் வேர்க் கறையான் போலப் பாண்டி நாட்டுக்குக் கேடுகள் செய்து வருகிறீர்கள். மன்னருக்கு அவ்வப்போது செலுத்துவதாக உறுதி கூறியவாறு நீங்கள் இறைப்பணம் கட்டவுமில்லே. மன்னருக்கு எதிராகச் சதிகள் செய்து, கொள்ளையும் கொலையும் வளர்க்கத் திட்டமிட்ட கயவன் எயிலுTர் ஆந்தையை உங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதும் நீங்கள் இழைக்கின்ற பெருங்குற்றமாகும்...'

'நிறுத்து!’ என்று கூவினார் திருமாறன். 'சுடுசட்டியில் விழுந்த நண்டு மாதிரிப் பொரிந்து கொண்டிருக்கிறாயே. பதறாதே தம்பி; எயிலுர் ஆந்தை பற்றி வீணாகக் கதைத்து என்னை அவமதித்ததற்கு, நீ மன்னிப்புக் கேட்டாக வேண்-