13
மார்கானை, நீ உன் சகோதரர்களைக் காப்பாற்றிவிட முடியும்' என்று, அதற்குரிய விவரத்தையும் சொன்னாள்; 'க.டல் நீரால் கல்லும் தேய்ந்துவிடுகிறது. கடலைப்போல் நீயும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும். நெஞ்சில் நிறைய உறுதிவேண்டும். கடலில் ஓயாமல் அலை வீசிக்கொண்டிருக்கும். அதற்கு இதயம் கிடை யாது, வேதனையும் தெரியாது. ஆனால் உனக்கு மென்மையான இதயமுண்டு. உனக்கு வேதனைகள் வரும். நீ எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு உரத்துடன் இருக்கவேண்டும். என் கைகளிலுள்ள முட்செடிகளைப் பார்! இவைகளைத் தொட்டாலே முள் குத்தி உன் கைகளில் உதிரம் வரும். இவைகளைக் கால்களால் நன்றாக மிதித்து, இவைகளிலிருந்து பொடி நார்களை உரிக்கவேண்டும். அந்த நார்களைக் கொண்டு நீ சட்டைகள் பின்னவேண்டும். பதினொரு சட்டைகள் பின்னி முடிந்தவுடன், நீ அவைகளை அவர்கள் மீது போடவேண்டும். அவர்கள் அதுமுதல் அன்ன உருவிலிருந்து மாறி நிலையாக அரசகுமாரர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் நீ நார் உரிக்கத் தொடங்குவதிலிருந்து பதினொரு சட்டைகளும் பின்னி முடியும்வரை, நீ எவரிடமும் வாய்திறந்து பேசவே கூடாது. பேசினால், உன்னுடைய முதல் வார்த்தையே அம்புபோல் பாய்ந்து உன் சகோதரர் அனைவரையும் கொன்றுவிடும். ஆகவே அவர்களுடைய ஆவிகள் உன் நாவைப் பொறுத்திருக்கின்றன! இந்தச் செடிகள் இந்தக் குகையைச் சுற்றி நிறைய உண்டாகியிருக்கின்றன.
எழிலி விழித்தெழுந்தபொழுது பூமியில் சூரியன் ஒளி எங்கும் பரவியிருந்தது. எழுந்தவுடன் அவள் ஆண்டவனுக்கு நன்றி சொல்லித் தொழுதாள். உடனே அவள் தன் வேலையைத் தொடங்குவதற்காகக் குகையை விட்டு வெளியே சென்றாள். - பூப்போன்ற தன் மெல்லிய கைகளால் அவள் முள் செடிகளைப் பற்றி ஒடித்துச் சேர்க்கலானாள். கைகளில் முள் குத்தியதால் இரத்தம் வடிந்தது. கைகள் புண்ணாகிவிட்டன. எனினும் எவர்களுக்காகச் செடிகளைப் பறிக்கிறாள் என்று எண்ணியவுடன், அவள் மேலும் உறுதியுடன் அவைகளை ஒடித்தாள். பிறகு அவைகளைப் பஞ்சுபோன்ற பாதங்களால் மிதித்து நேர்த்தியான நார்களாகும்படி செய்தாள்.
மேல் வானத்தில் பரிதி ஒளிமறைந்ததும், சகோதரர்கள் திரும்பி வந்தனர். அவள் பேச்சில்லாமல் மௌனமாயிருந்ததைக்