பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

'அப்படியானால் நான் கடவுளையும் வென்று வருகிறேன்!' என்று சபதம் கூறினான் மன்னன். உடனே அதற்கு வேண்டிய ஆயத்தங்களை அவன் தொடங்கி விட்டான்.

மிகப் பெரிய கப்பல் ஒன்று கட்டப்பெற்றது. அது மயிலின் கழுத்தைப்போல் வளைவாக அமைந்திருந்தது. வெளியிலிருந்து பார்த்தால், அதில் ஆயிரம் கண்கள் பதிக்கப் பெற்றிருப்பனபோல் காணப்பட்டது. உண்மையில் அவை கண்கள் அல்ல, பீரங்கிகளின் வாய்கள்.

மன்னன் கப்பலின் நடுப்பகுதியில் அமர்ந்து கொண்டான். அவன் ஒரு விசையை அழுத்தினால், ஆயிரம் குண்டுகள் வெடிக்கும்படி அதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு முறை குண்டுகள் வெடித்தவுடன் மீண்டும் குண்டுகள் திணிக்கப் பல வீரர்கள் இருந் தனர். நூற்றுக்கணக்கான இராட்சசக் கழுகுகள் கப்பலின்மேல் பகுதியில் இணைக்கப் பெற்றிருந்தன. அவைகள் புறப்பட்டு வானத்தில் பறக்கும்போது, கப்பலும் மேலே பறக்கத் தொடங்கி விட்டது. தரை மறைந்து விட்டது. மலைகளும், மடுக்களும், வனங்களும், நதிகளும் சிறு கோடுகளைப் போலத் தோன்றின. கப்பல் மேலே செல்லச் செல்ல இவைகளும் மறைந்து விட்டன. கப்பல் கதிரவனை நோக்கிப் பறந்து சென்று கொண்டிருந்தது. அது மேக மண்டலத்தில் மறைந்து விட்டது. கழுகுகள் மேலும் பறந்து கொண்டிருந்தன.

கடவுள் தம்மிடம் இருந்த எண்ணற்ற தேவதூதர்களில் ஒருவரை மட்டும் அனுப்பி வைத்தார். தூதர் வருவதைக் கண்டதும், அவரை நோக்கி மன்னன் ஆயிரம் குண்டுகளைப் பாய்ச்சினான். தூதர் ஒளிமயமான தம் சிறகுகளை உதறினார். ஆலங்கட்டிகள் சிதறி விழுவன போல், குண்டுகள் யாவும் சிதறிக் கீழே விழுந்தன. ஆனால் சிறகுகளிலிருந்து ஒரு துளி உதிரம் மட்டும் கப்பலில் மன்னன் இருந்த பகுதியில் வந்து விழுந்தது. அந்த ஒரு துளி ஆயிரம் டன் ஈயத்தைப் போன்ற எடையுள்ளதாகவும், அறை பிழம்பாகவும் இருந்தது. உடனே கப்பல் தலைதெறிக்கும் வேகத்துடன் பூமியை நோக்கி இறங்கத் தொடங்கிவிட்டது. கழுகுகளின் சிறகுகள் செயலற்று ஒடுங்கிவிட்டன. மன்னனின் தலையைச் சுற்றிப் பலமான காற்று வீசிற்று. மேகங்களும், அவன் முன்பு எரித்த நகரங்களிலிருந்து கிளம்பி வானத்தை அடைந்த புகைகளும் பயங்கர உருவங்களுடன் காட்சி அளித்தன. அவை பல மைல் பரப்புள்ள நண்டுகளைப்போலவும், அனல் கக்கும் அசுர நாகங்களைப்போலவும், பெரும் பாறைகளைப்போலவும் அவனை நோக்கி வருவன போலிருந்தன. பாதி உயிர் போனவனைப் போல் அரசன் கப்பலுள் 1779---