பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

25

நம்பிக்கையைத் தகர்த்தன. கடவுள் என்பவர் ஒருவர் உண்டா? என்று அன்னி சந்தேகப்படலானார்.


மதகுருவாகப் பணியாற்றிவரும் பிராங்க் பெசண்ட். தனது மனைவி அன்னியும், மகளும் நோயினால் கஷ்டப்பட்ட முழு விவரத்தையும் அறிவார்.


ஆனால், ஒரு மதகுருவுக்கு, குறிப்பாக ஒரு கிறித்துவனுக்கு இருக்க வேண்டிய சாதாரண இரக்கத்தையும் அவர் இழந்துவிட்ட மிருகமானார்.


இரக்கம்தான் இல்லை-போகட்டும், மனைவி, மகள் என்ற பாசத்தோடு இலை மறை காய் போன்ற உதவியையாவது செய்திருக்கலாம் அல்ல்வா?


குடும்பத்தில் கணவன் சரியில்லை; பெற்ற பெண் குழந்தை நோயிலே அகப்பட்டு செத்துப் பிழைத்த அபாய நிலையிலே இருந்து மீண்டது: பொழுது விடிந்து பொழுது போனால் கணவன்-மனைவியிடையே கடும் சச்சரவு சண்டை-கூச்சல்-குழப்பம்.


பெற்ற தாய் எமிலியிடமிருந்து, நம்பிக்கைத் துரோகி ஒருவன் பணப்பறிப்பு செய்து கொண்டு ஓடிவிட்ட துயரம்:


அன்னி படுத்தப் படுக்கையாகவே படுத்துவிட்ட நோயின் கடுந்தாக்குதல்; அம்மா கடனுக்காகக் குடியிருந்த வீட்டையே விற்றுக் கடனைத் தீர்த்துவிட்டு, படுத்து உறங்க சொந்த வீடும் இல்லாத அவலம்.


இவ்வளவு கொடுமைகளும், துன்பங்களும் ஒன்று கூடி, அன்னியை விரக்தியின் விளிம்புக்கு அழைத்துச் சென்று விட்டதால், வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை ஒன்றுதான் முடிவான வழியென்ற முடிவுக்கே வந்துவிட்டார். இதன் எதிரொலி என்ன தெரியுமா?