பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அன்னி பெசண்ட் அம்மையாரின்


3. தொழிற்சாலைகளில் சுகாதார வசதிகள் ஏற்பட்டன.
4. தேவை ஏற்பட்ட போது போராட்டங்கள் நடத்தப்பட்டன.
5. தொழிலாளர் குழந்தைகட்குரிய நலன்கள் கிடைத்தன.
6. அவர்களது கல்விகட்குரிய வசதிகள் வாய்த்தன.
7. சத்துணவு, உடைகள் ஆகியவைகட்கு மக்களிடம் திதி வசூலாயின.


இவ்வளவு நன்மைகளைப் போராடியே பெற்றார் அன்னி. எப்படியும் தொழிலாளர் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று உழைத்தார்.


அன்னியின் கோரிக்கைகளுக்கு இங்கிலாந்து நாட்டு மக்கள், பணக்காரர்கள், அரசு அதிகாரிகள் அனைவரிடமும் செல்வாக்கு ஏற்பட்டது. அதற்கு அவரின் சொல் வாக்கே காரணம் என்றால் மிகையன்று:


தொழிலாளர் வாழ்கின்ற பகுதிகளுக்கெல்லாம் சென்றும் அன்னி, அந்த மக்கள் சுகாதரத்தோடு எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அறிவுரைகளைக் கூறிவருவார்.


தொழிலாளர் நலன்கள் மீது இவ்வளவு ஆக்கறையும் பொறுப்பமுள்ள அன்னி, அதற்காக அவர் உழைத்து வரும் அரும்பாடுகளைக் கண்ட தொழிலாளர்கள், அந்த வீரப்பெண்மணியைத் தெய்வம் போலவே மதித்துப் போற்றி வந்தார்கள்.


அன்னியின் தொழிலாளர்த் தொண்டு, அவரது பேச்சாற்றல், பெரும்புகழை அவருக்கு உருவாக்கியதைக்கண்ட