நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
75
வாக்கினார்! அதற்கு அவரே தலைவர்! இந்த இயக்கத்துக்கு சுய 'ஆட்சி இயக்கம்' என்ற பெயர் ஏற்பட்டது.
பொதுமக்கள் பெசண்ட் இயக்கத்துக்குப் பேராதரவு காட்டினார்கள். அப்போதுதான் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலே நடந்த போராட்டத்தினை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார்: அவர் புகழ் வளர்ந்து வரும் நேரமாக இருந்தது.
இந்திய சுதந்திரத்துக்காக, "சட்டி மறுப்பு" ஒத்துழையாமை இயக்கம் போன்ற புதிய போராட்ட அறப்போர் முறைகளைக் காந்தியடிகள் மக்களிடையே அறிமுகப்படுத்தினார்.
இந்தக் கொள்கைகள், அன்னி பெசண்ட் அம்மையாருக்குப் பிடிக்கவில்லை; காந்தியடிகள் போராட்டத்தால் நாடு கொள்ளை, கொலை, புரட்சிக் களங்களாக மாறும் என்பது அம்மையார் கருத்து
இந்த முரண்பாடுகளால், காந்தியண்ணலுக்கும் அன்னி பெசண்டுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனாலும், மக்களால் விரும்பப்பட்ட தலைவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.
தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கமல்லவா? ஆனால் கருத்துப் பரிமாற்றங்கள், மோதல்கள் முரண்பாடுகள், விருப்பு வெறுப்புகள் தோன்றுவது சர்வ சாதாரணம் தானே!
முதல் உலகப் போர் நடைபெறும்போது, பிரிட்டிஷ் ஆட்சி காங்கிரஸ் கட்சியைக் கேட்காமலே இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தி விட்டது. இதைக் கண்ட மக்கள் கொதித்து எழுந்தார்கள்.