பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆசிரமத் தலைவியாக கஸ்தூரிபாய்

தென்னாப்பிரிக்காவில் பல சோதனைகளை எதிர் கொண்டு வெற்றிகண்ட மகாத்மா காந்தி, அங்கே ஃபினிக்ஸ் செட்டில் மெண்ட்’ என்ற ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு இந்தியர் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

அதே ஆசிரம வாழ்க்கையைத்தான், அவர் இந்தியா வந்த பிறகும் சபர்மதி, வார்தா போன்ற நகரங்களிலே அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்திலே வாழ்ந்து கொண்டிருந்த அவர், அப்போது ஆடம்பர வாழ்க்கையை மட்டும் ஒழிக்கவில்லை; தென்னாப் பிரிக்காவிலே உள்ள ஆங்கிலேயர் ஆட்சியையே அந்த ஆசிரமத்திலே இருந்து கொண்டுதான் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

எனவே, காந்தியடிகளது ஆசிரம வாழ்க்கை தென்னாப்பிரிக்காவிலே ஆரம்பமாகி, அங்குள்ள இந்தியர்களது உரிமைகளை மீட்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொழுப்பை உருக்கி சமத்துவம் என்ற விளக்குக்குரிய மனித நேயர் என்ற திரியாக மாறி ஒளி தந்தது!

ஆசிரம வாசிகள் ஒரு குடும்பத்தினர் போல சமத்துவமாக, மனித நேயமாகக் கூடி வாழ்ந்திடும் பண்புடையவர்கள் என்பதைக் காந்தியடிகள்தான் முதன் முதலில் வாழ்ந்து காட்டினார்.