நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
39
”இல்லற இன்பங்களில் மூழ்கி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தால், நான் செய்த பல பணிகளைச் செய்திருக்க முடியாது. குறிப்பாக மண், பெண், பொருள் என்ற மூவாசைகளையும் ஒழிக்காதவன், முக்தி என்ற மோட்சத்தை நாட முடியாது என்பது உறுதி... என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனை வரலாற்றில் எழுதுகிறார்.
பட்டினத்தடிகள் பாடியதைப் போல "பொல பொலவென குழந்தைகளைப் பெற்றுவிட்டுப் பின்பு ஆப்பசைத்த குரங்கைப்போல, வாழ்க்கையின் நிலை ஆகிவிடக் கூடாது” என்ற சிந்தனைதான் அவளுக்கு புலனடக்கத்தைத் தூண்டி விட்டது. அதனால், சுயேச்சையாகப் புலனடக்கத்தைக் கட்டுப்படுத்தலானார். இந்த அரிய ஆத்ம முயற்சியில் பல தொல்லைகள் ஏற்படலாயின. அன்னை கஸ்தூரிபாய்க்கு ஒரு படுக்கை! காந்தியடிகளுக்கு ஒரு படுக்கை அதுவும் ஒரே அறையில்!
காம வேட்கை மிகுந்து மோக வெறிக்கு அடிமையான காந்தியடிகள், சிற்றின்ப வேட்கையை ஒடுக்க முடியாமல் மிகவும் துன்பப்பட்டார்!
ஆனால், கஸ்தூரி பாவுக்கோ அது மிகவும் எளிதாக இருந்தது. இந்த உண்மையைக் காந்தியடிகளே ஒப்புக் கொண்டு, தனது 'சத்திய சோதனை'யில் ”என் மனைவி என்னை ஒருபோதும் தூண்டியதில்லை, வேண்டியதில்லை என்பதைக் கூற நான் கடமைப்பட்டவன். மன உறுதி இல்லாததாலும், காமவேட்கையாலும் துணிந்து அந்த பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க என்னால் இயலவில்லை” என்று எழுதுகிறார்.
பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைப்பிடிக்க அவர் அமைத்த வியூகம் என்னவென்றால், விரதத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, அவர் கஸ்தூரி பாயைக் கலந்து யோசித்தார். கஸ்தூரிக்கு அப்போது வயது என்ன தெரியுமா? முப்பத்து