பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61


என்று பண்டித ஜவகர்லால் நேரு தனது சேவா கிராம வருகைப் பதிவு ஏட்டிலே எழுதினார்.

'காந்தி அடிகளாரின் துனைவியார் அன்னை கஸ்தூரி பாய் சேவா கிராமத்திற்குச் செல்வோரை எல்லாம் வசீகரிப்பவர்; இந்தியாவில் இருக்கும் போது கஸ்தூரிபாய் அம்மையாரைத் தரிசிப்பதைப் போல் நம் அன்பையும், மரியாதையையும் ஒன்று போல வசீகரிக்கும் வேறொரு தாயன்புக் காட்சியை நாம் உலகெங்கும் உள்ள எந்த ஒரு பெண்மணியிடமும் காணமுடியாது. என்று, தேசப் பணிகளில் ஏணிபோல விளங்கிய சுசிலா நாயர் என்ற அம்மையார், அன்னை கஸ்தூரிபாயின் மறைவுச் செய்தி கேட்டுக் கண்ணீர் சிந்தினார்.

கஸ்தூரி பாய் பிறந்தகமான ’ராஜ்கோட் சமஸ்தான’ மக்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டத்தை 1939-ஆம் ஆண்டு துவக்கினார் காந்தியடிகள்.

இந்தப் போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்ட நேரத்தில் கஸ்தூரிபாய்க்கு உடல் நலம் சரியில்லை. மிக பலவீனமாகவே அவர் காணப்பட்டார். ஆனாலும், எனது தொண்டு சத்யாக்கிரகம் தான் என்று.அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதை அறிந்த ராஜ் கோட் சமஸ்தானத்து அதிகாரிகள் கஸ்தூரி பாயைக் கைது செய்து, விசாரணை செய்யாமலே அவரைச் சிறையில் அடைத்து விட்டார்கள்.

'கஸ்தூரி பாய்' தனது பிறந்த மண்ணிலேயே அறப்போர் செய்ததைப் பற்றி, மகாத்மா காந்தியடிகள் தனது 'ஹரிஜன்' பத்திரிக்கையிலே கீழ்க் கண்டவாறு எழுதினார்:

"ராஜ்கோட் போராட்டத்தில் என் மனைவி ஈடுபட்டதைப் பற்றி எதையும் நான் கூற விரும்பவில்லை. ஆனால், எனது மனைவி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டது குறித்து பலர்