பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

67



"எனது அன்புள்ள மகன் ஹீராலாலுக்கு,

சென்னை நகரில், நள்ளிரவில், நடுத்தெருவில், நீ குடி வெறியோடு பல தவறுகளைச் செய்ததற்காகப் போலீசார் உன்னைக் கைது செய்து, மறுநாள் ஒரு பெஞ்சு மாஜிஸ்திரேட் விசாரணையில், உனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு எளிய தண்டனையோடு உன்னை விடுதலை செய்து விட்டார்களே! இது தவறு என்றே எனக்குத் தோன்றுகிறது.

"உனது தந்தையாரின் பெருமையை மனத்தில் கொண்டுதான் அந்த மாஜிஸ்திரேட் உனக்கு இவ்வளவு சிறு தண்டனையை விதித்திருக்க வேண்டும். இந்த விவரத்தைக் கேட்டு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்றைய இரவு நீ தனியாக இருந்தாயா? அல்லது வேறு யாராவது நண்பர்கள் உன்னோடு இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. எப்படியானால் என்ன? நீ செய்தது பெருந்தவறு.

"உனக்கு என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. தன்னடக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் உனக்குக் கண்ணீருடன் கூறியிருக்கிறேன். ஆனால், நீயோ, மேலும் மேலும் வீழ்ச்சி அடைகிறாய். இப்போது நீ, என் உயிருக்கே அபாயமாக முடியும்படியான காரியங்களைச் செய்கிறாய். இறுதியை நெருங்குகிற பெற்றோருக்கு நீ அளிக்கும் துயரத்தைப் பற்றி எண்ணிப்பார்.

"கயமையான வாழ்க்கை நடத்துகிற நீ, சமீபத்தில் பெருமை வாய்ந்த உனது தந்தையைக் குறை கூறி ஏளனம் செய்வதாய் அறிந்தேன். பகுத்தறிவு உள்ளவனுக்கு அடாத செய்கை இது. ஈன்ற தந்தையாரை இழிவு படுத்துவதால் நீ உன்னையே இழிவு செய்து கொள்கிறாய் என்பதை