பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அன்னை கஸ்துரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்பேரப்பிள்ளைகள் மீது அடிகளுக்கும் அன்னைக்கும் அளவிலா அன்பும் பற்றும் உண்டு.

1939-ம் ஆண்டு கஸ்தூரி பாய் ராஜ்கோட் சமஸ்தானப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். தனது பேரன் கனுவை அந்த சமஸ்தான அதிகாரிகள் கைது செய்து விட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அடுத்த விநாடியே, கஸ்தூரிபாய் தனது உடல் நலிவு, மெலிவு, நோய்களது கொடுமைகள், இருதயக் கோளாறுகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு, பேரன் சிறுவனாயிற்றே என்ற பாசம் மேலிட்டதால் உடனே போராட்டத்தில் கலந்து கொண்டார். இச்சம்பவத்தை காந்தியடிகளும் தனது ராஜ் கோட் போராட்ட அறிக்கையில் குறிப்பிட்டு விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னை கஸ்துரிபாய் 'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற கவிமணியின் கருத்துக்கும்.

'பெண்ணின் பெருந்தக்கயாவுள' என்ற திருவள்ளுவர் பெருமானின் பெருமைக்குரிய கருத்துக்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர். என்றால் அது மிகையல்ல.