பக்கம்:அன்னை தெரேசா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 மகிழ்வடையச் செய்திருக்கவேண்டும். ஆகவே, அவரது நடைமுறைச் செயற் திட்டங்கள் பலவாறு தீவிர மடைந்தன. குட்டநோயாளிகளுக்கான ந - ம | டு ம் மருத்துவ மனைகளையும் அன்னே தொடங்கி வைத்தார். அறப்பணிச் சமுதாய நல அமைப்பிற்கு வெளி இடங்களில் அவதிப்பட்டுச் சிந்திச் சிதறிக் கிடந்த நோயாளிகளுக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்தார். இவ்வாருக, தொழுநோய் நல இ ல் ல ம் ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து, நோயாளிகளின் ஆரோக்கியமும் வாழ்வு அடைந்து, ஆண்டுகள் சில கழித்த நேரத்தில், அந்த இல்லம் கால்பாவிக் கால் ஊன்றி நின்ற மனையிடத்தை அரசு திடீரென்று ஆக்கிரமித்துக் கொள்ள முடிவெடுத்தது. -- அன்னை அதிர்ந்தார்: பாவம், இத்தனை நோயாளி களும் இனி என்ன ஆவார்களாம்?" வேதனையின் நெட்டுயிர்ப்போடு, அவர் உடனடியாக மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் டாக்டர் பி. வி. ராய் அவர்களைக் கண்டார்; பேசினர்; அரசாங்கத்தின் செயலைக் கொடுமை மிக்க தெனவும் குற்றம் சாட்டினர்; முடிவை அரசு' மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சுட்டிக்காட்டி வேண்டிக் கொண்டார். டாக்டர் பி. ஸி. ராய், அன்னேயின் உண்மை மிக்க அருந்தொண்டுகளைப் பரிபூரணமாகவே அறிந்தவர்; அன்ருெரு நாள், தம்மைச் சந்திக்க வந்த அன்னேயிடம், "அம்மையே, நீங்கள் நோயாளி அல்லவே!- நோயாளி களைக் குணப்படுத்தக்கூடிய சமய சஞ்சீவியான டாக்டர் ஆயிற்றே?” என்று வேடிக்கையாகக் கேட்டு, அன்னையின் அப்போதைய குறைகளை- அன்ன அப்போது சேவை செய்து வந்த சேரி ஏழைகள் சிலரின் பிரச்னைக் குறைகளை யெல்லாம் தீர்த்து வைத்தவர். அவர். ஆளுல், இப்போது, அன்னையின் விண்ணப்பத்தை நிறைவேற்றி வைக்க முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/109&oldid=736243" இலிருந்து மீள்விக்கப்பட்டது