115 தேவைப்படுவது அன்பு ஒன்றுதான். ஒரு சமயத்தில், நான் கத்தோலிக்க மதம் தழுவிய பெண் ஒருத்தியைச் சந்தித்தேன்; அவளுக்குப் புற்றுநோய்; அவளிடம் இது ஆண்டவனின் முத்தம்’ என்றேன். உடனே அவள், ! *முத்தத்தை உடனே நிறுத்தும்படி கடவுளிடம் பிரார்த் தன செய்யுங்கள், தாயே!” என்ருள். பாவம், இரண்டு நாட்கள் கழித்து, அவள் இறந்தபோது, அவளுடைய முகத்தில் அழகானதொரு புன்னகை இருந்தது!’ அன்னை மீண்டும் பதிலளிக்கிருர்: 'வினவத் தெரியத் தொடங்கின காலந்தொட்டு ஏசுநாதரின் பரமண்டலப் போதனைகள் என் நெஞ்சைத் தொட்டு நின்றன. ஏழைகளின் பணிதான் என் எதிர்காலமென்பதாக நான் அந்நாளில் திட்டமிட்ட போது, என்ன ஆகர்ஷித்த நாடு இந்த இந்திய நாடு கான்!-உலகத்தைச் சிருஷ்டித்த ஆண்டவன் தானே உலகத்தின் மக்களையும் ஒரே நிறையாகச் சிருஷ்டித் தான்?-ஆளுல், அந்த மக்களின் சமூகம்தானே மனிதர் களிடையே மேடுகளையும், பள்ளங்களையும் ஏற்படுத்த ஏதுவாகி, இன்றைய உலகப் பிரச்னையாக ஆகிவிட்ட பசி, வறுமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஏதுவாகிவிட்டது?-ஆகவேதான், பசி-வறுமை போன்ற சமுதாய அநீதிகளுக்குப் பலியாகும் ஏழைகளுக்கு, குறிப் கூாக ஏழைகளில் ஏழைகளுக்குப் பணி செய்ய வேண்டு மென்னும் கர்த்தரின் கட்டளையை என் அன்புப் பணித் திட்டத்தின் தலையாய முதற் கொள்கையாகவும் வகுத் தேன்! எங்கள் பணி சமய பூர்வமான வெறும் சமூகப்பணி அல்லவே? கடையரினும் கடையரிடையே ஒ ன் றி வாழ்ந்து, அவர்களுக்குரிய பணிகளே நம்பிக்கை ஒளி காட்டி, அன்பின் ஒளி வழியில் செய்வதுதான் எங்கள் பணிமனையின் உயிர்மூச்சு! அதுவே ஏசுவின் ஆணை!?? ஆளுலும்:
பக்கம்:அன்னை தெரேசா.pdf/115
Appearance