பக்கம்:அன்னை தெரேசா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 யூகோஸ்லேவியாவின் பொதுவுடைமைத் தலைவர் மார்ஷல் டிட்டோவும் குறிப்புப் புள்ளிகள். விதி என்பதாக ஒன்று உலகத்திலே இருக்கிறதோ, இல்லையோ? ஆனால், விட்டகுறை-தொட்டகுறை என்ற ஒன்று இருக்கவே வேண்டும்! இல்லாவிட்டால், யூகோஸ்லேவிய நாட்டில் பிறந்த அக்னஸ் ஏழை இந்தியநாட்டில் அன்புப் பணி புரிந்து அன்னே தெரேசாவாகவும் ஏழைகளின் நம்பிக்கைத் தீபமாகவும் உலகத்தின் உச்சியிலே ஒளிகாட்டி, வழியும் காட்டிக் கொண்டிருக்க இயலுமா, என்ன? . பிறந்த மண்ணில் பிஞ்சு நெஞ்சோடு, ஆடிப்பாடிப் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே கருணை வள்ள லான கர்த்தரின் கருணை மொழிகளை மதப்போதர்களின் வாய் மொழிகளாகச் சொல்லக் கேட்ட அக்காலத்தி லேயே, ஆண்டவணை உணர்ந்தவள் அன்றைய அக்னெஸ்ஆமாம்; இன்றையத் தெரேசா அன்னே!- இரக்கம் உடையவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். உலகத்தின் இரக்கம் அவர்களே வந்தடையும் இதயத்திலே துரய்மை உள்ளவர்கள் பாக்கிய சாவிகள், பாக்கியவதிகள்! அவர்கள் ஆண்டவனைக் காண்பார்கள்!- இப்படிப்பட்ட ஏசுநாதரின் எத்தனை எத்தனையோ பொன்மொழிகளே நித்ததித்தம் எத்தனை எத்தனையோ தடவைகள் பிரார்த்தனைக் கீதங் களாகப் பயின்ற அக்னெஸின் இதயம் பரிபக்குவம் அடையத்தொடங்கியதில் ஆச்சரியம் இல்லை தான்!-- உலகிலுள்ள ஏழைகளுக்குத் தொண்டு செய்யவேண்டு மென்ற மனிதாபிமானப் பண்பு அந்தப் பிஞ்சு மனத்தில் வேரோடி வலுவடையத் தலைப்பட்ட நேரத்தில், உலகின் கண் ஏழைகளின் நாடாக விளங்கிய இந்திய நாடு அச்சிறுமியின் உள்ளத்தில் நிழலாடத் தலைப்பட்டதிலும் வியப்பில்லை!- கேளுங்கள்; கொடுக்கப்படும்! தேடுங்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/130&oldid=736267" இலிருந்து மீள்விக்கப்பட்டது