பக்கம்:அன்னை தெரேசா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கொடுத்துள்ள தேசத்தந்தை ஏழை எளியவர்களுக்கு, குறிப்பாக, தொழுநோயாளிகளுக்கு ஆற்றிய ஊழியங்களே காலம் நிரந்தரமாகவே சொல்லிக் கொண்டிருக்குமே! - ஆசியஜோதி பண் டி. த ஜவஹர்லால் நேரு, ஆமதாபாத் நகரத்தில் நடைபெற்ற மாதர் கூட்ட மொன்றில், 31-1-1951 அன்று உரை நிகழ்த்திய பொழுதில் குறிப்பிட்டார் : ... சமூகம் ஒரு குழந்தை மாதிரி குழந்தை வளர்ந்து பெரியவன் ஆன பின், குழந்தைப் பருவத்துச் சட்டையையே அவனுக்கு அணிவிக்க முயற்சி செய்தால், அச்சட்டை கிழிந்துவிடும். அது போன்றே, சமுதாயமும் காலத்துக்கு ஏற்றபடி வளர்ந்து திய பழக்கவழக்கங்களை ஏற்றுக் கொள்கிறது. இப்படிப் பட்ட புதிய நிலேயை-புதிய மாற்றத்தை அனுமதிக்க மறுத்தால், புரட்சி வந்து, சமூகத்தை மாற்றிய தீரும். உலகம் மாறிக் கொண்டே இருப்பதால், எந்தத் தேசமும் மாரு மல் ஒதுங்கி நிற்கவே முடியாது!...” & அனுபவம் கண்ட உண்மை இது: அந்நிய நாட்டவர்களிலே, இந்திய நாட்டின்பால் அந்நியோன்யமான உறவும் உரிமையும் கொண்டு, இந்திய, நாட்டின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றியவர்களில் டார்டர் அன்னிபெசண்ட் அம்மையார் (Dr. Annie Besai). (1841-1933) குறிப்பிடத்தகுந்தவர்; பாரதத் திருநாட்டை அன்று அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கில நாட்டைச் சார்ந்த அம்மையார், பாரதத்தில் அடியெடுத்து வைத்து. இந்நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிக்க உழைத்த தோடு, சாதி சமய மறுபாடில்லாமல் மக்கள் அனைவரை யும் ஒரே அன்புச் சமுதாயமாக ஆக்கும் வழியில், இந்தியச் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்து, பெண்மைப் பணியுடன் பொது நலப்பணியும் புரிந்தவர். புகழொடு தோன்றிய அம்மையார் o அன்பே உயிர் வடிவமாகவும் அனைத்து உயிர்கட்கும் ஆருயிர்த் தோழியாகவும் சாலையோ மருத்துவப் பணிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/136&oldid=736273" இலிருந்து மீள்விக்கப்பட்டது