பக்கம்:அன்னை தெரேசா.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அன்னையின் அன்புப் பணிகள் நாடு இனம் சமயம் மொழி மதம் கடந்து, முழு உலகினை முழுமையாகத் தழுவிய நிலையிலேயே அன்றும் இன்றும் தொடர்கின்றன; அவ்வாறே, அன்னையின் அன்புப் பணி இயக்கத்தை நாடிவரும் பரிசில்களும் நன்கொடைகளும் அமை கின்றன. அந்நாளில் பிரசித் திபெற்ற மருத்துவ நிபுணராகவும் பொதுவுடைமைவாதியாகவும் பி ர பல மடைந் தி ரு ந் த மேற்கு வங்கத்தின் முதல்வர் டாக்டர் பி. வி. ராய் (Dr. B. C. Roy) அவர்கள் அன்னை தெரேசா ஏழை களுக்காகப் பாடுபட்டு வந்த உண்மையான பொதுநலச் சேவைகளை மனப்பூர்வமாக உணர்ந்தறிந்த நாள் முதலாக அன்னையின்பால் அளவில்லாத அன்பும் மரியாதையும் மதிப் பும் கொண்டு, அன்னைக்குத் தேவைப்பட்ட உதவிகளை, தேவையான நேரங்களில் அரசாங்க முறையிலும் சொந்த முறையிலும் செய்துள்ளார். எந்நேரத்திலும் தம்மை வந்து பார்க்கலாமெனவும் அன்னைக்கு அனுமதி வழங்கினர். ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சைகள் செய்து வந்த மனிதப் பண்பாளர், குழந்தைகளுக்கான விடுதிகளே அதிக அளவில் ஏற்படுத்த அன்னேயைத் தூண்டியதோடு, பொருள் உதவிகளையும் செய்தார். 1957.ఉు கல்கத்தாவின் புறநகரான கோபரா’ என்னும் பகுதியில் தொழுநோயாளிகளுக்காக ஒர் இல்லத்தைத் தொடங்கினர் அன்னை. தொழுநோய் மருத்துவத்தில் வல்லுனரான டாக்டர் ஸென், அன்னையின் அன்புப் பணி அமைப்பைச் சேர்ந்த கன்னிச் சகோதரியர்க்குப் பயிற்சி அளித்தார். "தொழு நோய் பற்றிப் பீடிக்கத் தொட்ங்கும் ஆரம்பக் காலத் திலேயே, நோயாளிகள் சிகிச்சை பெற முயற்சி செய்தால், நோயைக் குணப்படுத்தி விடலாம்; பிரிட்டன், அமெகிக்க