பக்கம்:அன்னை தெரேசா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 குறுக்கீடாக இருப்பதாக நான் கருதுவதே இல்லை. நான் எதையாவது செய்யவேண்டுமானல், முதன் முதலில், அதை நேரடித் தலைவராகிய ஆண்டவனிடமே சொல்லி விடுகிறேன்; என் தலைவரே என் தேவைகளைப் பூர்த்தி செய்கிருர். எப்படியோ பணம் வந்து சேர்ந்துவிடும். பணம் கிடைக்கவில்லை, நான் கேட்டதைப் பெறவில்:ே யென்றல், அதற்காக நான் வருந்துவது கிடையாது. ஏனென்ருல், அது இறைவனுக்கே விருப்பமில்லே யென்று எண்ணி, நான் செய்ய விரும்பிய காரியத்தைச் செய்யாமல் நிறுத்திவிடுவேன்!” அன்னை விசுவாசத்தோடு செபம் செய்து கர்த்தரிடம் வேண்டுதல் விடுத்த காரியங்களெல்லாம் கர்த்தர் அதனால் நல்லபடியாகவே நடந்தேறியிருக்கின்றன. ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம்; ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்!” திருமூலர்தம் திருவாக்கில் மனிதாபிமானத்தால் உயர்ந்து நின்ற அன்னையின் பணி வாழ்வில் கருணை வள்ளல் உண்டாக்கிக் காண்பித்த அதிசயங்கள் ஒன்ரு, இரண்டா? ஒரு சமயத்தில், அன்னையும் அன்னையின் சகோதரி களும் அரிசி இல்லாமல் பட்டினி கிடக்க வேண்டி வந்த ஓர் அவலச் சோதனையின் போது, அவர்கள் அனைவருக்கும் அப்போது தேவைப்பட்ட அரிசியை முன் பின் தெரியாத பெண் ஒருத்தி ஓடிவந்து கொடுத்தாளே?. வேருெரு சமயத்தில், நோயாளிகளின் படுக்கை மெத்தைகள் மழையால் பாழடைய, அவர்கள் பாவம், கடுங்குளிரால் அல்லற்படுவதைக் காணச் சகிக்காமல், அன்னை தமது தலையணையிலிருந்த பஞ்சைப் பிரித்து, நோயாளிகளின் நைந்த மெத்தைகளில் திணித்துச் செப்பம் செய்ய எண்ணிய சமயத்தில், தெய்வம் போல ஒருவர் அன்னை முன் தோன்றி படுக்கை மெத்தைகளேச் சமர்ப்பிக்கவில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/150&oldid=736289" இலிருந்து மீள்விக்கப்பட்டது