20 அன்பின் அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். மெப் தானே? அன்னே: மெய்தான்; அன்பின் அந்த அற்புதமான உணர்வு தான் எங்களுடைடய பொதுநலம் சார்ந்த அன்புப்பணி இயக்கத்திற்கு உயிர் மூச்சாக விளங்கி வருகிறது. மக்கள் தொண்டில் சரணடைதல், அன்பு பாராட்டு தல், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுதல், மகிழ்வோடு பணிபுரிதல் போன்ற மனநிலைச் சிறப்புக்கள்தாம் எங்கள் சமுதாயத்தின் ஜீவாதாரமான நோக்கங்களாக இருந்து வருகின்றன. உள்ளன்போடு நாம் செய்கிற சேவைகள் ஏழை எளியவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவதாக அமையவேண்டும். அவர்களும் பிறரால் நேசிக்கப்படுகிரு.ர்கள் என்கிற மன நிறைவை ஏழைகள் பால் ஏற்படுத்தவேண்டுமென்பதுதான் எங்கள் விருப்பம். அப்போதுதானே, வெந்து நொந்த ஏழைகளுக்கு வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கையும், அதையும் விட ஆண்டவரிடம் நம்பிக்கையோடு கூடிய ஒரு பற்றுதலும் ஏற்பட முடியும்? பேட்டியாளர்: உலகத்திலே அங்கங்கே நலிந்தும் மெலிந்தும் வாடியும் வதங்கியும் கிடக்கின்ற ஏழை எளிய மக்களுக்காக நீங்கள் உங்கள் அமைப்பின் வழியில் செய்து வருகின்ற பொதுநலக் காரியங்களெல்லாம் அங்கங்கே அரசு சார்ந்த அமைப்புக்கள் வாயிலாகவே செய்யப் படுவதே நல்லதென்று ஒரு கருத்து பரவலாக நிலவி வருகிறது! - அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அன்னை: நாங்கள் செய்து வருகிற இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் நாங்களா செய்து வருகிருேம்?ஊஹாம்! அவன் அன்றி ஓரணுவும் அசையாதே?-- ஆண்டவனின் கருணை மட்டும் இல்லாமற்போனல், எங்களால் இத்தகைய அன்பு நலப் பணிகளைச் செய்ய முடியுமா? -என்ன? ஒருக் காலும் முடியாது ஏழை
பக்கம்:அன்னை தெரேசா.pdf/20
Appearance