பக்கம்:அன்னை தெரேசா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 மக்களின் நிமித் தம் நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு சேவையிலும் எங்களுடன் கூடவே ஆண்டவனும் துணைநிற் கிருர் என்பதாகவே நர்ங்கள் அனைவரும் உணர் கிருேம்; உண்மையும் அதுவே தானே? - - ஏழைகளிலும் ஏழைகளுக்காகத் தம்மையே அர்ப்பணம் செய்து வருகின்ற அன்னை தெரேசாவின் அன்பின் தூது வர்கள்' என்னும் உலகளாவிய அறநெறிப்பணி அமைப்பின் பயனுள்ளதும் பயனளிப்பது மான நடைமுறைச் செயற் பணிகளைப் பற்றிப் பத்திரிகையாளர் மால்கம் மக்கரிட்ஜ் *-g; sort-orgotáč, socio-lost of glassign” (“Something Beautiful for God") என்கின்ற தமது நூலில் விளக்கமாகவே எழுதியுள்ளார். - அன்புத் தாயார் சொல்வார்கள் : 'பரிபூரணமான உங்க ளுடைய இருதயததோடும் ஆத்மாவோடும் மனத்தோடும் நீங்கள் உங்களது ஆண்டவனே நேசிப்பீர்களாக!' - இதுவே ஆண்டவனின் கட்டளை அல்லவா? - நடக்க முடியாததைக் கட்டளை இடமாட்டான் ஆண்டவன்! - அன்பு என்பது ஒரு கனி! - அன்புக் கணிக்குப் பருவம் இல்லை; எக்காலத்திலும் கிடைக்கக் கூடியது; எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது. அன்பின் கனியை யார் வேண்டு மானுலும் சேகரம் செய்யலாம்; அதற்கு அளவே கிடையாது. தீவிரமான உள்ளொளி மிகுந்த வாழ்க்கை யின் மூலம், தியானம், பிரார்த்தனை, தியாகம் போன்ற மனப் பக்குவத்தின் விளைவாக, இப்படிப்பட்ட தெய்வீக அன்பை யார் வேண்டுமானலும் பெறமுடியும்!” - தெய்வத்தின் மீதான இந்தத் தெய்வீக அன்பிற்கு ஓர் உயிர்ச் சாட்சியமாகத் திகழ்கிருர்கள் அன்னை. வரலாற்றுப் புகழ் சேர்த்த இந்திய நாட்டின் கல்கத்தாப் பெருநகரின் வரலாற்றின் புண் ணிய நாள் அது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/21&oldid=736330" இலிருந்து மீள்விக்கப்பட்டது