பக்கம்:அன்னை தெரேசா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மாகவே நடைமுறைப் படுத்துவதன் பலகைக் கடையரினும் கடையருக்கு அப்பணிகளின் பலன்கள் முழு அளவில் கிடைத்திட வசதி வாய்ப்புக் கிடைத்தால்தான், அன்பின் தொண்டுக்குப் பூரணமான பயன்படு பொருள் கிடைக்கவும் வாய்ப்பு வசதி கிடைக்கும் அல்லவா? - . விசுவாசம் மிக்கதும், இதய நெகிழ்ச்சி மிகுந்ததுமான தெரேசாவின் அன்புவழிப் புதுக் கொள்கை இது! - எனவே, அவர் செப்டம்பர் கடைசிவாரத்தில், பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னு நகருக்குப் பயணப் பட்டார் - விரைவிலேயே மேற்கொள்ளவிருக்கும் அன்பு நலப் பொதுமக்கட் பணிக்குத் தம்மை முழு அளவிலும் எல்லா வகையிலும் தகுதிப்படுத்திக் கொள்வதற்காகவே. அவர் பீகாரில் ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை அமெரிக்க மருத்துவ அன்புப் பணிச் சகோதரிகளின் அமைப்பில் மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ள்லானர். அக்கறையோடும் ஆர்வத்தோடும் தீவிரப் பயிற்சி யைத் திறமையுடன் முடித்துக்கொண்டு, கல்கத்தாவுக்குத் திரும்பலானர் அவர், ஏழைகளின் இளைய சகோதரிகள் அமைப்பில் சகோதரி தெரேசா தங்கநேர்ந்த நாட்கள் அவருக்குப் பயனளிப் பதாக அமைந்தன. பணி ஆர்வத்தால் புது வெள்ள மெனப் பொங்கிப் பூரித்த சகோதரி, சேரிகளைத் தீண்டி அவற்றை மேலும் நெருக்கமாகப் படித்துக் கொள்ளவும் செய்தார். 1948 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையைஇயேசு நாதரின் திருப் பிறப்பு நாள் விழாவை, அமைதி யான மகிழ்வோடும், மனமார்ந்த நிறைவோடும் தெரேசா கொண்டாடினர். ரோ ம் நகரிலிருந்து பண்டிகைச் சமயத்தில் ஆணை வந்து சேர்ந்ததில், தெரேசா அடைந்த அமைதியும் ஆனந்தமும் இரட்டிப்பு ஆனதும் இயல்புதானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/60&oldid=736373" இலிருந்து மீள்விக்கப்பட்டது