பக்கம்:அன்னை தெரேசா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்குரியதோ, அவற்றையே சிந்தித்துக் கொண்டிருங்கள்!' எப்போதோ, எங்கேயோ, ஏனே கேட்ட - கேள்விம் பட்ட பைபிள் பொன்மொழி அப்போது, அங்கே, காரணத் துடனே அந்த அரசியல் பிரமுகரின் நெஞ்சரங்கத்தில் ஒலித்தது; எதிரொலித்தது. அவரும் கண்ணிருடன் உறவாடவேண்டியவரானர் தே ரு க் கு .ே த ர் கண்ட காட்சிகள் சாதி கடந்த அன்பைப் பேசின; மதம் தாண்டிய மனிதாபிமானத்தைச் செப்பின; இனம் மீறிய பாசத்தைப் பறைசாற்றின! - தொழு நோய்க்கு ஆளான அளுதை நோயாளிகளின் ரத்தமும் தினமுமான அருவருப்பூட்டும்: புண்களேயெல்லாம் கழுவிச் சுத்தப்படுத்தி, மருந்து இட்டு, மருந்து கொடுத்து, அன்ன தெரேசாவும் அவரது பணிமனை சார்ந்த கன்னிச் சகோதரிகளும் பணிவிடைகள் செய்த நிதர்சனக் கோலங்கள், அந்த அரசியல் புள்ளியின் நெஞ் சிலும் நினைவிலும் கண்ணிர்க் கோலமிட்ட சொந்த அனுபவங்களாகச் சிலேயோடி நிலைப்பெய்தத் தவறிவிட வில்லைதான்! - வந்த காளிகோவில் பூசாரிகள் மற்றும் அடியார்களிடம் அவர் சொன்னர் : உணர்ச்சிவசப்பட்ட வராகச் சொன்னர் : "ஐயா! தெய்வத்துக்குத்தான் சோதிக்கிற உரிமை உண்டு; மரியாதையும் உண்டு; ஆளுல், நான் தெய்வம் அல்ல; அற்பமனிதன்! - ஆனலும், தெய்வத்தின் பேரால் உங்களை ஒரு கணம் சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது! - அன்ன காளி, மேரி அன்னையாக அவதாரம் எடுத்து, இப்பொழுது அன்னே தெரேசாவின் உருவிலே பொது நன்மைத் தொண்டுகள் செய்வதை நானே கண்ணுக்குக் கண்ணுகக் கண்டு மெய் சிவிர்க்கும் பாக்கியத்தைப் பெற்றேன். அன்னை தெரேசாவின் புனிதமான - அன்பு மயமான அந்த இடத்தை இட்டு நிரப்ப, உங்களுடைய தாய்மார்களோ, அல்லது சகோதரிமார்களோ, மன முவந்து வரும் பட்சத்தில் மறுவிடிையிலேயே அன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/86&oldid=736401" இலிருந்து மீள்விக்கப்பட்டது