உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அண்ணாவின்


வில்லை. கருத்துக் கொவ்வாத 'களை' வயலிலிருந்து களையப்படவேண்டும், நினைவையும், நேரத்தையும் வீணாக்கும் மூடநம்பிக்கைகள் சமுதாயத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் — இதுவே நாம், கூறிவருவது பழமை என்பதற்காக தூங்குவது, சாப்பிடுவது, ஆகியவைகள் கூடாதென்றா கூறுகிறாேம்? பழமை என்பதற்காகப் பண்டைய மன்னர்களின் அணைக்கட்டுகள் அழிக்கப்பட வேண்டுமென்றா விரும்புகிறாேம்? வானத்தை முட்டும் கூடகோபுரங்கள், பண்டைப் பெருமையின் பளிங்குமா மண்டபங்கள், படிக்கட்டுகள், இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள் அவைகளிலே நாம் காணும் சித்திரத் திறமை ஆகியவைகளை நாங்கள் அகற்ற வேண்டுமென்றா சொல்லுகிறாேம்? பழமை என்பதற்காக பற்றுக் கொள்ளாமலில்லை. ஆனால், கோட்டை கொத்தளங்களைக் கண்டு பெருமைகொள்ளும் அதேநேரத்திலே அந்தக் கோட்டைகளின் இடிந்த தன்மையைக்காட்டி — 'எழில்மிகு கோட்டை இடிந்துவிட்டது, ஏன்? நாம் ஏமாளிகளானதால்!' என்று சுட்டிக்காட்டுகிறோம், இழந்த பெருமையை நாம் பெறவேண்டுமென்ற எண்ணத்தால்!

புதுமை மணம் நாட்டிலே பரவவேண்டுமென்று கூறும் நாங்கள், பழைமைப்பாசி அகலவேண்டுமென்று கூறும் நாங்கள், பழங்காலத்திலே ஒன்றுமேயில்லை என்று கூறவில்லை!

அப்போது சிற்சில இருந்தன, அன்றைய தேவை வசதிகளையாெட்டி. ஆனால் இப்பாெழுது காலம் மாறிவருகிறது, நமது வாழ்க்கை முறையும் மாறவேண்டுமென்கிறாேம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/15&oldid=1662839" இலிருந்து மீள்விக்கப்பட்டது